Astrology: தொழில் செய்யப்போறீங்களா? கொடிகட்டி பறக்க போகும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!
Astrology: பலருக்கும் சொந்த தொழில் செய்வதில் முனைப்பு இருக்கும் நிலையில், அந்த திட்டத்தில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகர்கள் யார் என்பதை காணலாம்.
மேஷ ராசி:
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு வருகிறார். இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை குருவின் பார்வை வலுப்படுத்த போகிறது. கடத்த காலங்களில் மேஷ ராசிக்கு ஒரு சரியான பாதையே இல்லாமல் வாழ்க்கை சென்று இருக்கலாம். தொழில் ரீதியாக சில சங்கடங்களையும் சந்தித்து இருக்கலாம். ஜென்மத்தில் குறு இருக்கும் போது யாரோ உங்களுடைய மூளைக்குள் உங்களை செயல்பட விடாமல் கட்டுப்படுத்துவது போன்ற உணர்வுகளும் சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த சம்பவங்கள் எல்லாம் முடிவுக்கு வரப் போகிறது. குறிப்பாக தொழில் ரீதியான சங்கடங்கள் பிரச்சனைகள் அத்தனையும் விலகப் போகிறது.
இரண்டாம் இடத்தில் குரு இருப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் தள்ளிப்போன சுப காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். தொழில் ரீதியாக எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் நஷ்டத்திலேயே செல்கிறது என்று நினைத்திருந்த உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருகும் நேரம் இது. மேஷ ராசி பொருத்தவரை கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் வாழ்க்கை சமமாக சென்று கொண்டிருந்தது இந்த நிலை தற்போது மாறப்போகிறது. நீங்கள் எதுவுமே செய்யாமல் அப்படியே இருந்தால் கூட தொழில் ரீதியாக வெற்றி உங்களைத் தேடி வரும். வாழ்க்கை வசந்தமாகும்.
கடக ராசி:
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீடு ஆன லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இத்தனை நாட்களாக பத்தாம் பாவமான தொழில்தானத்தில் அமர்ந்து வேலையில் பெரிய சரிவை சந்தித்து இருப்பீர்கள். குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல கடக ராசி வாசகர்கள் நிச்சயமாக வேலையற்ற சூழ்நிலையில்தான் இருந்திருப்பீர்கள் அல்லது ஒரு சிறிய வேலையை மாற்றம் ஆவது இருந்திருக்கும். இப்படியான சூழ்நிலையில் கடக ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு வருகிறார்.
அப்படி வரும் பொழுது முதலில் பத்தாம் பாவம் ஆன தொழில் ஸ்தானத்தில் உங்களுக்கு இருந்த தடைகளை நீக்குவார். ஒரு தொழிலில் நீங்கள் முதலீடு செய்தால் அதில் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் படி நடக்கும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய போராட்டங்களை நீங்கள் சந்தித்திருந்தாலும் அவைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆறாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் கடன்கள் அனைத்தும் அடைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் வீடாக பதினொன்றாம் ஸ்தானம் வருவதால் நிச்சயமாக தொழில் செய்தால் அதில் பெயர் புகழ் கிடைத்தே தீரும். நீண்ட நாட்களாக தொழில் ரீதியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த கடக ராசி அன்பர்களுக்கு இதுதான் நல்ல நேரம்.
தனுசு ராசி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவத்தில் அமருகிறார் குரு. ஆறாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் தொழிற் ஸ்தானமான 10-ஆம் வீட்டை பார்வையிடுகிறார். ஏற்கனவே பல வகைகளிலும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பகவான் நன்மைகளை வாரி வழங்கி இருப்பார். தற்போது அந்த தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேதுவை குரு பார்ப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்ய வேண்டி வரும். அத்தனை வேலைகளிலும் லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப் போகும் தொழிலாளர் உங்களுக்கு ஆதாயம் உண்டு.
யாரையும் நம்பி நீங்கள் முதலீடு போட வேண்டாம் உங்களை மட்டும் நம்புங்கள் வெற்றி கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும். நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மன தைரியத்தை மட்டும் கைவிடாதீர்கள். உடல்ரீதியான தொந்தரவுகள் வரலாம் அவற்றை மருத்துவத்தின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். தொழில் ரீதியாக மட்டும் முன்னேற்றம் இல்லை பணவரவு ரீதியாகவும் முன்னேற்றம் உண்டு. எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை என்று கஷ்டப்பட்ட உங்களுக்கு வங்கி சேமிப்புகள் உயரும். தொழில் மேன்மை தொழில் லாபம் உண்டு.
கும்ப ராசி:
எனது அன்பான கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் குரு பகவான் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்வையிடுகிறார். தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டை பார்வையிடுவது உங்கள் வாழ்நாளில் நீங்கள் இதுவரை சந்திக்காத பெரிய தொழில் மேன்மையை அடைவீர்கள். ஏற்கனவே நீங்கள் நன்றாக வேலை செய்பவர் என்று பெயர் எடுத்தவர். இப்படியான சூழ்நிலையில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் தொழிலில் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் பெற போகிறீர்கள். ஏற்கனவே ஒரு தொழில் பார்த்து வந்தவர்கள் இரண்டு மூன்று தொழில்களை பார்ப்பதன் மூலம் நல்ல லாபம் மேன்மை அடைவீர்கள். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தொழிலில் நல்ல லாபம் பெறலாம் .