Kumba Rasi: "மிகப்பெரிய வாய்ப்புகள் வரும்.. பேச்சில் கவனமா இருக்கனும்..' கும்ப ராசிக்காரர்களே..! தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி?
Tamil New Year: தமிழ் புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதியை தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இதையடுத்து, தமிழ் புத்தாண்டிற்கான ராசிபலனை நமது ஏபிபி நாடு வாசகர்களுக்காக ஜோதிட கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ் ராமன் கணித்துள்ளார்.
கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க்கையில் உயரம் தொடக்கூடிய பாக்கியம் கிடைக்க வாழ்த்துகள்.
சனிபகவான்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் சனி பகவான் வந்தது முதல் ஜென்ம சனியின் தாக்கம் உள்ளது. அனைத்திற்கும் நீங்களே அழுத்தம் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஏப்ரல் 13-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு எல்லாவுமே நன்றாக நடக்கும். 3ம் இடத்தில் குரு ராகுவுடன் சஞ்சாரம் இருப்பதால் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், யாராக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ண ஓட்டம் அதிகரிக்கும்.
வாகனங்களில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். சகோதரர்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும். எந்த முயற்சியாக இருந்தாலும் பெரிய அளவு வெற்றி பெறும். அக்டோபருக்குள் நிறைய வாங்கிவிடுவீர்கள். மார்க்கெட்டிங் தொழில் செய்பவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் வரும். பிரச்சினைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
பேச்சில் கவனம் தேவை:
அக்டோபர் 31-க்கு பிறகு உங்கள் பேச்சில் கவனம் தேவை. பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. யாரையும் நம்பி பணம் கொடுப்பதில் கவனம் தேவை. முடிந்தவரை பணம் கொடுக்காமல் இருப்பதே நல்லது ஆகும்.
தாயார்கள் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரக பிரச்சினைகளுக்கு வாய்ப்பு உண்டு. முள் போல இருக்கும் எதுவும் உங்களுக்கு நல்லதாக மாறும். ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் தானமாக செய்ய வேண்டும்.
காதல் திருமணம்:
அவிட்ட நட்சத்திரம் காரணத்திற்கு செம யோகமான காலம் ஆகும். குழந்தை பாக்கியம், காதல் திருமணம், வாகன யோகம் என்று மிகவும் யோகமாக இருப்பீர்கள். சதய நட்சத்திரத்தினருக்கு குடும்பத்தில் சிக்கல் இல்லாமல் இருக்க நீங்கள் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். சதய நட்சத்திரத்தினர் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வீண்வாதம் செய்யாமல் அடம்பிடிக்காமல் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது.
பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கைகளில் அடிபட வாய்ப்புள்ளது. சகோதர, சகோதரிகளுக்கு காயம்படவும் வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகள் பெரியளவில் வெற்றி பெறும். குரு வீட்டில் ராகு வந்து உட்காரப்போகிறார். அதனால் பெரிய அளவு பணம் வரும். அக்டோபர் 31க்கு பிறகு பெரிய அளவு பணம் வரும். அது வரை பொறுமையாக இருங்கள். பெரிய சிக்கல்கள் ஏதும் கிடையாது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க: Tamil New Year Mesham Rasi Palan: 'பணம் கையில விளையாட போது..' மேஷ ராசிக்காரர்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்..!
மேலும் படிக்க: Tamil New Year Simmam Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களே... பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசம்.. உங்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் இதோ..