
Meenam Rasi Palan: ஏழரை சனி; சந்தோஷத்திற்கு இதுதான் வழி - மீன ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் இதோ..!
Meenam Rasi Palan Tamil New Year 2023: மீன ராசி நேயர்களுக்கு பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்த பலன்களை கீழே விரிவாக காணலாம்.

வருகின்ற சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார்.
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடத்தில் குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி (சித்திரை மாதம் 9 ஆம் நாள்) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். தனது ஆட்சி வீடான மீனம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் இன்னும் சில நாட்களில் செவ்வாய் பகவானின் வீடான மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். மீன ராசி நேயர்களுக்கு அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது. இதனால் குழப்பங்கள் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளதால் பிறரின் அறிவுரைகளை கேட்காமல் இருப்பது நல்லது. இடமாற்றத்தால் சந்தோஷம் ஏற்படும். செவ்வாய் வீட்டில் குரு, ராகு சேருவதால் பண வரவு இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் உள்ள சகோதர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பல், ஈறு, கை, இரத்த அணுக்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு எண்ணங்கள் விரிவடைந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். ராசிக்காரர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. மனதில் தோன்றக்கூடிய விஷயங்களில் சரியாக கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதோடு காரியத் தடைகள் நீங்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
நட்பு வட்டாரம், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு, குழப்பங்கள் ஏற்படலாம். அடி வயிறு, மேல் வயிறு, அஜீரண பிரச்சினைகள் ஏற்படலாம். துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்ட நிலையில் எதிலும் அவசரப்படாமல் இருந்தால் வெற்றிகள் கிட்டும்.
வழிபாடு: ஸ்ரீரங்கம் அல்லது ராமேஸ்வரத்தில் உளுந்து வடையுடன் கூடிய தானம் வழங்க வேண்டும். அங்கு செல்ல முடியாதவர்கள் நதிகள் பக்கத்தில் இருக்கக்கூடிய கோயில்கள் (பெருமாள் கோயிலாக இருந்தால் கூடுதல் சிறப்பு) . இதனால் ராசிக்காரர்களுக்கு வரும் பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

