இன்று சனிப்பெயர்ச்சி - விருச்சிகம் ராசிக்கு 2023 எப்படி இருக்கப்போகுது?
17.01.2023 நாளை சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. எல்லா பக்கமும் ராசி பலன்களைப் புரட்டிப் பார்த்தாலும் நமக்கு ஏதும் சாதகம் இருக்காது என்று எல்லாவற்றையும் வாசித்துவைப்போர் ஏராளம். அந்த வகையில் விருச்சிகம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி 2023 எப்படி? என்று பார்ப்போமாக.
17.01.2023 நாள் சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. எல்லா பக்கமும் ராசி பலன்களைப் புரட்டிப் பார்த்தாலும் நமக்கு ஏதும் சாதகம் இருக்காது என்று எல்லாவற்றையும் வாசித்துவைப்போர் ஏராளம். அந்த வகையில் விருச்சிகம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி 2023 எப்படி? என்று பார்ப்போமாக. விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்கள் இதோ.
விருச்சிக ராசியைப் பொறுத்தவரை இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்கிறார். 4ஆம் வீட்டில் அமர்வட்தால் சில அலைச்சல்கள் தவிர்க்க முடியாது. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சனி ஆட்சி பெறுவதால் இல்லத்தரசி வாய்ஸ் அதிகரிக்கும். உங்களுக்கு பணி நிமித்தமாக ட்ரான்ஸ்ஃபர் வரலாம். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். செலவே செய்யக் கூடாது என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாலும் கூட தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்திலும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் இயங்குவதே நல்லது. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. பத்திரத்தை ஆராய்ந்து சொத்துகளை வாங்கவும். அதைவிட முக்கியம் வட்டிக்கு கை நீட்டி கடன் வாங்கவே கூடாது.
வண்டி, வாகனங்கள் பழுது ஏற்படலாம். அதுவும் அடிக்கடி ஏற்படலாம். சரி பழுதுதானே என்று அசட்டையாக இருக்க வேண்டாம் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயின் உடல்நலனை அக்கறையுடன் கவனியுங்கள். அவருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கான கட்டம் இருக்கிறது. என்னடா எல்லாம் சோதனை என மனம் தளர வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால் அவர்களின் நடவடிக்கையை கூர்ந்து கண்காணித்து வரவும்.
விருச்சிக ராசியை சனிபகவான் பார்ப்பதால் இந்த ராசிக் காரர்களுக்கு அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஆனால் அதற்கெல்லாம் டானிக் போல் வைட்டமின் ப கிடைக்கும். அதாங்க பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகள் உங்களை வந்து சேரும்.
விருச்சிக ராசிக்காரர்கள் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும்.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். நிறைய நல்ல மாற்றங்கள் உங்களை வரிசை கட்டி வரவேற்கும் உங்கள் பேச்சில் பக்குவம் தெரியும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல இப்போது விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - தனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள்.
பெண்களைப் பொறுத்தவரை நகை வாங்கும் அம்சம் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் ஓவர் டைமிலிருந்து விடுபடுவார்கள். கன்னிப் பெண்கள் காதலை தவிர்க்கலாம். உயர்கல்வியில் கவனம் செலுத்தலாம். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துங்கள்.
வியாபாரிகள் வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவார்கள்.
மொத்தத்தில் விருச்சிக ராசிக்கு இந்த சனி மாற்றம் வேலைச்சுமையை, செலவு தந்து அலைக்கழித்தாலும் துவளாமல் வெற்றி தரும். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ. தடைகள் நீங்கும்.