சமயபுரம் கோயிலில் செப்.17 முதல் முழு அன்னதானத் திட்டம்!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரம் பேர் தரிசனம் செய்வதற்காக சமயபுரம்மாரியம்மன் கோயிலை தேடி வருகிறார்கள். அதிகளவில் மொட்டை அடித்தால், காணிக்கை செலுத்துதல் ,போன்ற பல்வேறு வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு மிகவும் சிறப்புடைய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், இட வசதிகளை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக அன்னதானம் வழங்க வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது இதன்படி சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பழனி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இப்போது வரை அங்கு பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சக்தி பீடங்களில் முதன் மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில் இது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்தபடியாக அதிக உண்டியல் வருவாய் உடையது .அதிகளவில் பக்தர்கள் வரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது.செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ,ஆகிய மூன்று கோயில்களும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். இதன்படி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. திருச்சி மலைக்கோட்டை உட்பட ஐந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது ரோப்கார் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ரூபாய் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.ஆண்டு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் சமயபுரம் உள்ளிட்ட 5 கோயில்கள் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை ரூபாய் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் 1 கோடி மதிப்பீட்டில் புதிய ஓதுவர் பயிற்சி பள்ளிகள் ஏற்படுத்தப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வேண்டிவரும் மனநல காப்பகம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.