ஜூன் 14 சபரிமலை கோயில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை ஜூன் 14ம் தேதி திறக்கப்படுகிறது. வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜைகள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறாது
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது,
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்ட்டது. முதலில் வடமாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியா மாநிலங்களிலும் கொரோனா கோரதாண்டவம் ஆடியது. கடந்த சில நாட்களாக தான் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கேரளாவில் வரும் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சராசரி பாதிப்பு 14 சதவீதமாக உள்ளது. தொற்று விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் லேசான தளர்வு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?
இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை 14ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறுகையில், ‘ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை வரும் 14ஆம் தேதி லை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைப்பார். கோயிலில் 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜைகள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்: ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?