கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விபரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் கோயில் விபரங்களையும் வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களுக்கு சொந்தமான நிலம் பற்றிய விவரங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது!  இந்நிலையில்,  சிதம்பரம் நடராசர் திருக்கோயில் சொத்து விவரங்கள் பொது வெளியில் வைக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 


முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். 


Jaggi Vasudev Praises Govt: இணையத்தில் கோயில் சொத்துக்கள் பதிவேற்றம்; தமிழக அரசுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு


அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமை ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும்,   கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழாக்கள் போன்ற தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.   


சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம்:  


இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது.  


இருப்பினும், 1925 ஆண்டிற்கு முன்னரே நடராசர் திருக்கோயில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகள் இருந்து வந்தன. உதாரணமாக, 1885ம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிநீதிமன்றத்தில் கோயில் தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்கில் "கோயில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் திருக்கோயிலாக அறிவிக்க வேண்டும்" என்று முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முத்துச்சாமி அய்யர், ஜே.ஜே. ஷெப்பார்ட்  ஆகியோர் சிதம்பரம் திருக்கோயில் பொது வழிபாட்டுத் தலம் என்பதையும், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினர்.கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?இருப்பினும், 1925-ஆம்ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட `இந்து சமய அறநிலைய வாரிய மேற்பார்வையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்போதைய அரசு நிர்வாகத்திடம் தீட்சதர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த முறையீட்டை அனுமதித்த அரசு, கணக்கு சமர்பித்தல், நிர்வாகத் திட்டங்களை வகுத்தல் தொடர்பான சட்டப் பிரிவுகள் திருக்கோயிலுக்கு பொருந்தும் என்றும் அறிவித்தது. 


Also Read:  கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் நான்காயிரம் நிவாரணம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்


1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு அரசுத் துறையாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. நடராசர் திருக்கோயிலை மேற்பார்வையிட செயல் அதிகாரியை  அப்போதைய மெட்ராஸ் அரசு நியமித்தது. இதற்கு எதிராக, திருக்கோயில் தீட்சதர்கள் மெட்ராஸ் உயர்நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.        


1956 ஆம் ஆண்டு, நடராசர் திருக்கோயில் உள்விவகாரங்களில் அரசு தலையீடுகள் இருக்கக் கூடாது என்று தெரவித்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம், செயல் அதிகாரியை நியமிக்கும் உத்தரவு செல்லாது எனவும் தீர்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், " ஒவ்வொரு சமயக் கிளைக்கும், சமயம் சார்ந்த காரியங்களை நிர்வகிப்பதற்கான சுதந்திரம் உண்டு. சமயம் சார்ந்தவற்றில் தனக்குரிய காரியங்களை நிர்வகிப்பதற்கும் சுதந்திரம் உண்டு எனவும் தெரிவித்தனர்.       கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?


 இதற்கிடையே, கடந்த 1982ம் ஆண்டு, கோயில் நிர்வாக முறைகேடுகளை அடிக்கோடிட்டு, தில்லை நடராசர் கோயிலுக்கு ஏன் செயல்அலுவலரை நியமிக்கக் கூடாது? என இந்து சமய அறநிலைய  துறை நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கில்,  செயல் அலுவலரை நியமனம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த்தது.


கடந்த 2009ம் ஆண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், " சமயநெறி ஒழுகலாற்றுடன் (Religious Practice) இணைந்திருக்கும் பொருளியல், நிதியியல், அரசியல் நடவடிக்கை அல்லது சமயம் சார்பற்ற பிற நடவடிக்கை எதையும் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு இயக்கலாம்" என்று தீர்ப்பளித்தது.           

Tags: Sekarbabu Chidambaram Natarajar temple Hindu Religious & Charitable Endowments Department Temple Administration in Tamil Nadu

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

முதல் வழிபாட்டு சிலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் மக்கள்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!

மயிலாடுதுறை: சிறப்பாக நடைபெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா..!

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!