மேலும் அறிய
Advertisement
மதுரை : நூபுர கங்கையில் புனித நீராட அனுமதியுங்கள் - பக்தர்கள் வேண்டுகோள்..
”புரட்டாசி விரதத்திற்கு தீர்த்தம் ஆட அழகர்கோயில் வந்தோம் ஆனால் தீர்த்த தொட்டிக்குப்போய் நீராட முடியவில்லை.” - என்றனர்.
தென் திருப்பதி, திருமாலிருஞ்சோலை, 108 வைணவ திருதலங்களில் ஒன்றாக போற்றி அழைக்கப்படுவது மதுரை அழகர்கோயில். இங்கு அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
வட இந்தியாவில் உள்ள புனித நதியான கங்கை போன்று வற்றாத ஜீவ நதி போல நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் புனித நீராட தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் சுபகாரியங்கள் குல தெய்வ வழிபாடுகள் உள்ளிட்டவைகள் துவங்கும் முன் அழகர்கோயிலுக்கு வந்து நூபுர கங்கையில் புனித நீராடி கேன்களில் நீரை பிடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மிகமுக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது இந்த தீர்த்தம்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 5 மாதமாக நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலையங்கள் அனைத்து திறந்திருக்கும் சூழலில் இன்னும் நூபுர கங்கையில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் ராக்காயி அம்மனை மட்டும் தரிசனம் செய்துவிட்டு கீழ் இறங்குகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அளித்துவரும் வேலையில் இங்கு புனித நீராட சமூக இடைவெளி பயன்படுத்தி கொரோனா நெறிமுறைகளை பின்பற்றியும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்க வைத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தும்பைப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் கூறுகையில், “அழகர்கோயிலுக்கும் எங்கள் கிராமத்திற்கும் நெருக்கிய தொடர்பு உண்டு. வாகை சூடும்முன் போட்டியாளர்கள் தும்பை பூவை தான் சூடுவார்கள். அப்படி எங்கள் கிராம மக்கள் தும்பை பூவை சூடி அழகர்மலையில் நூபுர கங்கை தீர்த்தம் ஆடி ஊருக்கு வருவார்கள். இதனால் அழகாமலையான் வெற்றியை மலை, மலையாய் அள்ளித்தருவான் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நிகழ்வு காலப்போக்கில் மாறினாலும் அழகர் மலை தீர்த்தம் ஆடுவதை மாற்றிக்கொள்ளவில்லை. தற்போது புரட்டாசி விரதத்திற்கு தீர்த்தம் ஆட அழகர்கோவில் வந்தோம். ஆனால் தீர்த்த தொட்டிக்குப்போய் நீராட முடியவில்லை. இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்து கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion