Rasipalan 16 June, 2023: ஆஹா! இந்த ராசிக்காரரா நீங்கள்...? உங்களுக்கு இன்னைக்கு அமோகமான நாளாச்சே..!
RasiPalan Today June 16: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 16.06.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
ரிஷபம்
தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அறிமுகம் நிறைந்த நாள்.
மிதுனம்
விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
கடகம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
சிம்மம்
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.
துலாம்
இணையம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். புதிய சிந்தனைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.
விருச்சிகம்
தொழிற்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
மகரம்
காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுமை பிறக்கும். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.