தளபதியுடன் தல பொங்கல் - வெளியான வீடியோ

Published by: ABP NADU

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்.

அரசியல் பணியில் முழு ஈடுபாடு வேண்டுமென சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதனால், அவர் நடிக்கும் கடைசி படமாக தளபதி 69 உருவாகி வருகிறது.

விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் ‘The Route' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தில் விஜய், சமந்தா, கீர்த்தி சுரேஷ், கதிர் போன்ற பல நட்சத்திரங்கள் இணைத்துள்ளனர்.

இந்நிலை ‘The Route' நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் கொண்டாட்ட வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜு, கதிர் கலந்து கொண்டனர்.

மேலும், தளபதி விஜய் இவர்களுடன் இந்த வருட பொங்கலை கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.