மேலும் அறிய

ரிஷபத்துக்கு நன்மை... கன்னிக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் என்னென்ன?

Rasi palan Today Oct 08: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 08.10.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்:

புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். பக்தி நிறைந்த நாள்.

ரிஷபம்:

மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்:

வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்களின் உதவியின் மூலம் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

கடகம்:

எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்துகொள்வீர்கள். நீர்நிலை சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். மதிப்புகள் மேம்படும் நாள்.

சிம்மம்:

முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி:

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

துலாம்:

இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். கலை சார்ந்த அறிவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். உயர்வு நிறைந்த நாள்.

தனுசு:

கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தொழில் சார்ந்த திறமைகள் வெளிப்படும்.  தந்தை பற்றிய எண்ணங்கள் மேம்படும். நீர் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

மகரம்:

புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நவீன பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

மீனம்:

சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Embed widget