Rasipalan 6, August 2023: தனுசுக்கு வரவு.. கும்பத்துக்கு வெற்றி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
RasiPalan Today August 6: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today August 6:
நாள்: 06.08.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம் :
காலை 8.00 மணி முதல் காலை 9.00 மணி வரை
மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாகன பழுதுகளால் விரயம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். திடீர் வரவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொது காரியங்களில் மரியாதை அதிகரிக்கும். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்கிடையே நெருக்கம் ஏற்படும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
மிதுனம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போருக்கு மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடகம்
தனவரவுகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். முகப்பொலிவு அதிகரிக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
சிம்மம்
பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தினரை விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். திடீர் பயணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் ஆணவமின்றி செயல்படவும். பரிவு வேண்டிய நாள்.
கன்னி
மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
துலாம்
இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பங்காளிகளிடத்தில் விவேகத்துடன் இருக்கவும். மனதளவில் தைரியம் பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.
விருச்சிகம்
உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். நிர்வாக துறைகளில் மதிப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
தனுசு
மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வரவு நிறைந்த நாள்.
மகரம்
செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தடைகள் நிறைந்த நாள்.
கும்பம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தனம் சார்ந்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
மற்றவர்களை பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.