RasiPalan Today March 30: கும்பத்துக்கு பக்தி... சிம்மத்துக்கு மறதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today March 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 30.03.2023 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
மேஷம்
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சற்று கவனம் வேண்டும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். விவசாய பொருட்களால் ஆதாயம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷபம்
எதிர்ப்புகளை சாதுரியமாக கையாண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
மிதுனம்
பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணிதம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தடைகள் குறையும் நாள்.
கடகம்
மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவர் பிடிவாதமாக இருப்பார். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். பயனற்ற பழக்கவழக்கங்களை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். விரயங்கள் உண்டாகும் நாள்.
சிம்மம்
எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
கன்னி
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உறுதி நிறைந்த நாள்.
துலாம்
வியாபார பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பகை குறையும் நாள்.
விருச்சிகம்
உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். சிக்கனத்துடன் செயல்படுவது நெருக்கடிகளை குறைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இயந்திரம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் கோபமின்றி செயல்படவும். பிறரின் மனதை பாதிக்கும் வகையிலான நகைச்சுவை பேச்சுக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாய்மாமன் வழியில் சுபகாரிய செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். நிதானமான செயல்பாடுகள் வெற்றியை அளிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்வு நிறைந்த நாள்.
கும்பம்
தன்னம்பிக்கையான சில பேச்சுக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் ஆதரவு ஏற்படும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
மீனம்
புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பதற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை பற்றிய புரிதல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.