Rasipalan 30, June 2023: ரிஷபத்துக்கு வெற்றி...தனுசுக்கு நலம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today June 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today June 30:
நாள்: 30.06.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இராகு :
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
எமகண்டம் :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாரத சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சனைகளில் தெளிவு பிறக்கும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாகும். தனவரவுகள் மேம்படும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுறுசுறுப்பு நிறைந்த நாள்.
கடகம்
குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். மறதிகள் குறையும் நாள்.
சிம்மம்
வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனை நிமிர்த்தமான கடன் உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
கன்னி
உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சகோதரர் வகையில் நன்மை ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். சிரமம் குறையும் நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். ஆசைகள் நிறைந்த நாள்.
தனுசு
எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.
மகரம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
மீனம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.