Rasi Palan Today, 30 JUNE : மேஷத்துக்கு அமோகம்...! மீனத்துக்கு நட்பு..! அப்போ உங்களுக்கு எப்படி..?
Rasi Palan Today, 30 JUNE : எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 30.06.2022, வியாழக்கிழமை
நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
குளிகை :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் – தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள் ஆகும். பணவரவும், தனவரவும் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று சாதகமாக முடியும். வாகனயோகம் உண்டாகும். கடன் வசூலாகும். குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினை தீரும். நன்மைகள் நிறைந்த நாள் ஆகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். மகாலட்சுமி கடாஷம் வீட்டில் நிகழும். நல்லவர்கள் நட்பு கிட்டும். சொத்து பிரச்சினை ஒன்று உங்களுக்கு சாதகம் ஆகும். திடீரென பணவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். ஆலய வழிபாடு அவசியம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு களைப்பான நாளாகும். பணி, சொந்த விவகாரங்கள் என்று அலைச்சல் இருக்கும். நீண்ட நேர பிரயாணம் செய்யும் சூழல் உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிவபெருமானை வணங்கி மன அமைதி பெறலாம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். தேவையற்றதை எண்ணி குழப்பிக்கொள்ளக்கூடாது. உணவுப்பழக்கத்தில் கூடுதல் கவனம் தேவை. மன அமைதி காண அம்மனை வழிபட வேண்டும். பிள்ளைகள் வழி பிரச்சினைகள் கூடிய விரைவில் சுமூகமாக தீரும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் நீங்கள் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்லும் சூழல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண்கோபம் உண்டாகும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. காசி விஸ்வநாதரை நாமம் சொல்லி நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தொழிலில் புதிய மாற்றம் ஏற்படும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். உங்கள் புகழ் மேலோங்கும். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். நல்லோர் நட்பு கிட்டும். தொலைபேசி வழி இன்பத்தகவல் கிட்டும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் திறமைக்கு உகந்த நாள். நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிட்டும் நாள். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். பெற்றோர்கள் பெருமைப்படுவார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்வில் அடுத்தகட்ட வளர்ச்சி கிட்டும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, நீண்டநாள் இருந்து வந்த உடல்உபாதை நீங்கும். உடல்நலம் சீராகும். நீண்டநாட்களுக்கு பிறகு எதிர்பாராத சந்திப்பு நடக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணப்பிரச்சினை சுமூகமாக தீரும். குழந்தைகள் மீது அன்பு அதிகரிக்கும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இந்தநாள் நீங்கள் ஈகை செயலில் ஈடுபடுவீர்கள். உங்களால் பலர் பயனுறும் நாள் இது. எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கும் கிட்டும். உங்களது சாமர்த்தியமான செயலால் தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு ஓய்வு கிட்டும். நீண்ட நாள் உழைப்பு, நீண்ட நாள் பிரயான களைப்பு நீங்க ஓய்வு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கலப்பேச்சுக்கள் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு புதிய நட்பு கிட்டும். உங்களது நட்பு வட்டாரத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும். புதிய நட்பால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள் ஆகும். திருமண முயற்சிகள் கைகூடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்