Today Rasipalan September 24: துலாமுக்கு இன்பம்..மீனத்துக்கு முயற்சி..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan September 24: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 24.09.2023 - ஞாயிற்று கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை மணி 4.30 வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
வாகனங்களைச் சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
ரிஷபம்
வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான விரயம் ஏற்படும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செல்வச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும் நாள்.
மிதுனம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாயப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தெளிவு வேண்டிய நாள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்
நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். சிக்கலான சில விஷயங்களுக்குத் தெளிவு பிறக்கும். தாமதம் குறையும் நாள்.
கன்னி
உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
துலாம்
விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மதிப்பு மேம்படும் நாள்.
தனுசு
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும். முகத்தில் பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆதாயம் நிறைந்த நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.