Rasipalan: மிதுனத்துக்கு கவனம்.. மீனத்துக்கு நிதானம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
RasiPalan Today April 24: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 24.04.2023 - திங்கள்கிழமை
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்
இழுபறியான தனவரவுகள் சிலருக்கு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
விலை உயர்ந்த ஆபரணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய நபர்களின் சேர்க்கை உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செய்கின்ற செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்மம்
சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மற்றவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
கன்னி
உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நீர்நிலை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவு உண்டாகும் நாள்.
துலாம்
கூட்டு வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முயற்சிகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் நேரிடலாம். புதிய முயற்சிகளை குறைத்து கொள்வது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
தனுசு
புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டை மாற்றி அமைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். சில பணிகளை செய்யும் பொழுது நிதானம் வேண்டும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களுக்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை தெரிவிக்கவும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.