மேலும் அறிய

Today Rasipalan March 25: கடகத்துக்கு நிறைவு; சிம்மத்துக்கு நிதானம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 25.03.2024 - திங்கள்

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

தந்தைவழி தொழிலில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும்.  மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள். 

ரிஷபம்

உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள். 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். களிப்பு நிறைந்த நாள். 

கடகம்

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகளால் நன்மதிப்பு ஏற்படும். குறுந்தொழிலில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள். 

சிம்மம்

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஜாமீன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். கலைத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வரவு நிறைந்த நாள். 

துலாம்

உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அசதி நிறைந்த நாள். 

விருச்சிகம்:

மனதில் பொருளாதாரம் தொடர்பான எண்ணம் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிக காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். 

தனுசு

தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். பரிசு நிறைந்த நாள். 

மகரம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். 

கும்பம்

திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

மீனம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்பு ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மறதி குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget