Today Rasipalan February 24: மகரத்துக்கு கவனம்; கும்பத்துக்கு அமைதி - இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan: பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 24.02.2024 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
காலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.
ரிஷபம்
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு சார்ந்த துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பெருமை நிறைந்த நாள்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான தனவரவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
கடகம்
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு மேம்படும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
சிம்மம்
அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
கன்னி
தனவருவாய் தேவைக்கேற்ப இருக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்பு கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
தனுசு
உடன் பிறந்தவர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
மகரம்
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். கவனம் வேண்டிய நாள்.
கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நவீன கருவிகளின் மீது ஆர்வம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். பாசம் நிறைந்த நாள்.