மேலும் அறிய

Rasipalan December 02 : மகரத்துக்கு புத்துணர்ச்சி; கும்பத்திற்கு புகழ் ! உங்கள் ராசிபலன்?

Rasi Palan Today, December 02: இன்று கார்த்திகை மாதம் 17ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 02, 2024: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோக பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.
 
ரிஷப ராசி
 
குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். நட்பு மேம்படும் நாள்.
 
மிதுன ராசி
 
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
அக்கம், பக்கம் இருப்பவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகள் மூலம் விரயங்கள் ஏற்படும். திடீர் பயணங்களால்  அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மேம்படும். சிக்கனமாகச் செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தாமதம் மறையும் நாள்.
 
 கன்னி ராசி
 
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீனத் தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
 
 துலாம் ராசி
 
குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தன வரவுகளில் உண்டான நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதிற்குப் பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் உருவாகும். தடைகள் குறையும் நாள்.
 
விருச்சிக ராசி
 
புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம் புரியாத சில கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு விமர்சனங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். தேர்ச்சி நிறைந்த நாள்.
 
தனுசு ராசி
 
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை காக்கவும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
சபை சார்ந்த துறைகளில் பொறுமையைக் கையாள வேண்டும். மனதில் நினைத்த எண்ணங்களைச் செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். கேளிக்கையான செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிலும் நேர்மையுடனும் கடமையுடனும் செயல்படுவீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
Embed widget