மேலும் அறிய

Today Rasipalan, November 30: தனுசுக்கு புகழ்... மகரத்துக்கு ஊக்கம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 30.11.2023 -  வியாழன் கிழமை

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். சூழ்நிலையறிந்து கருத்துகளைப் பரிமாறுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கல்விப் பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

புதுமையான உணவுகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட செயல்களில் மாற்றமான சூழல் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்த்துக் கொள்ளவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் ஏற்படும். எதிர்ப்பு குறையும் நாள்.

கடகம்

ஆன்மிகம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் போது பொறுமை அவசியம். மறைவான செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதில் விருப்பம் உண்டாகும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறதி நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய பதவிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.  கலைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

புதிய நபர்களின் ஆதரவால் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் மூலம் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு மேம்படும். மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய தேடலை ஏற்படுத்தும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சுய கணிப்புகள் சற்று காலதாமதமாக நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

தாய்வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

மகரம்

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளைப் புரிந்து செயல்படுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஊக்கம் நிறைந்த நாள்.

கும்பம்

கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். எதிலும் தனித்துச் செயல்படுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Embed widget