மேலும் அறிய

Today Rasipalan, November 29: கும்பத்துக்கு நிறைவு.. மிதுனத்துக்கு போட்டி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 29.11.2023 -  புதன் கிழமை

நல்ல நேரம்:

காலை 9:15 மணி முதல் காலை  10:15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

மாலை 12:00 மணி முதல் மாலை 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7:30 மணி முதல் காலை 9:00 மணி வரை

சூலம் - வடக்கு 

மேஷம்

மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணம் சார்ந்த உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.

மிதுனம்

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மைகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். போட்டி நிறைந்த நாள்.

கடகம்

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களைப் பற்றிய தெளிவு உண்டாகும். கலை பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். மந்திரம் சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்ப பெரியோர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தாமதம் நிறைந்த நாள்.

துலாம்

வியாபாரப் பணிகளில் நிதானம் வேண்டும். புதிய வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலையறிந்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சி மேம்படும் நாள்.

விருச்சிகம்:

பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

மகரம்

உயர் கல்வி தொடர்பான எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உறவுகளின் வழியில் ஆதரவு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வீடு மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

கும்பம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய கலைகள் சார்ந்த தேடல் அதிகரிக்கும். சாதுரியமாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆபரணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் புதிய முடிவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Embed widget