RasiPalan Today September 20: கடகத்துக்கு யோகம், கும்பத்துக்கு வெற்றி.. இந்த நாள் உங்க ராசிக்கு பலன் இதுதான்..
RasiPalan Today September 20: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 20.09.2022
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் –வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். இன்று முதலீட்டிற்கான முயற்சிகளை எடுக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று சில சவால்களை சந்திக்க நேரும். வெற்றி கிடைப்பதற்கு உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை. ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். அதனை எப்படி சமாளிப்பது என்று உணர்ந்து சமாளிக்க வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சமயோசிதமாக செயல்பட வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். எனவே தவறுகளை குறைத்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனம் திசை திரும்பலாம். வாழ்க்கையில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். பணியை எளிதாக முடிப்பீர்கள். பணியை விரும்பி செய்வீர்கள்..
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று சிறந்த நாளாக இருக்கும். நட்பான அணுகுமுறை தேவை. அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும். உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை முடிக்க அவர்கள் தகுந்த நேரத்தில் ஆதரவு தருவார்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சத்தை உருவாக்கிக்கொண்டு முன்னேறுவீர்கள். நீங்கள் சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களிடம் உள்ள பணம் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ளலாம். பிரார்த்தனை சிறந்த பலனைத் தரும். வேலையில் காணப்படும் சுமை காரணமாக பதட்டமாக உணர்வீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணியில் தவறுகள் நேரலாம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் நாளை திட்டமிட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவீர்கள். உங்களின் யாதார்த்தமான அணுகுமுறை அதற்கு உதவும். குறிப்பிட நேரத்திற்கு முன்பே பணிகளை முடித்து விடுவீர்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும். அவை உதவிகரமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்களின் கடின உழைப்பிற்காக ஊக்கத் தொகை அல்லது சலுகைகள் வகையில் பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் ஏற்படும். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். திட்டமிட்டப்படி பணிகள் சிறப்பாக நடக்கும். இதன் காரணமாக நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று நம்பிக்கை குறைந்து காணப்படும். உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும். இன்று அதிக பணம் சம்பாதிக்க முடியாது. உங்கள் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று பதட்டம் காணப்படும். மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சிறப்பான வேலையை வழங்குவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக இயங்கி பணியாற்றுவீர்கள்.