மேலும் அறிய

Rasipalan December 18: ரிஷபத்துக்கு பெருமை... கன்னிக்கு புரிதல்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today December 18: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 18.12.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

ரிஷபம்

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். பெருமை நிறைந்த நாள்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழல் அமையும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். வாகன மாற்றம் முயற்சிகள் ஈடேறும். ஆதரவு நிறைந்த நாள்.

கடகம்

எந்தவொரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வீர்கள். குழந்தைகளின் உயர்கல்வியை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சகோதரர்களின் உதவியின் மூலம் வெளியூர் பயணங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளை பற்றி அறிந்து கொள்வீர்கள். பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விவசாய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவதன் மூலம் எண்ணியதை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

கன்னி

மனதில் ஒருவிதமான இறுக்கம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் கோபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு மறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட தூர பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வேலையாட்களிடம் கனிவுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் லாபகரமான சூழல் அமையும். புரிதல் மேம்படும் நாள்.

துலாம்

பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த விரயங்கள் ஏற்படும். அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். இறை வழிபாடு நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அன்பு வேண்டிய நாள்.

தனுசு

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சில பணிகளை சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் உயர்வான சூழல் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். போட்டிகள் நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கை குறையும். உறவினர்களின் வழியில் செலவுகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

மீனம்

நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சுயத்தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் அலட்சியமின்றி செயல்படவும். கதை, கவிதை மற்றும் கட்டுரை போன்றவற்றில் ஆர்வம் உண்டாகும். மாமனாரின் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget