Rasipalan 11, June 2023: கடகத்துக்கு ஊக்கம்... ரிஷபத்துக்கு அறிமுகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 11: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 11.06.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த உடன்பிறப்புக்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
மிதுனம்
நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.
கடகம்
உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். ஊக்கம் வேண்டிய நாள்.
சிம்மம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதான எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உணர்வுப்பூர்வமாகச் செயல்படுவதைத் தவிர்க்கவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
கன்னி
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அனுபவமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
துலாம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். கல்வி பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
விருச்சிகம்
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் திருப்தியான சூழல் ஏற்படும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். காது தொடர்பான இன்னல்கள் குறையும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
மகரம்
சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கணிப்பொறி சார்ந்த துறைகளில் புதிய சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான சில வரவுகளால் கையிருப்பு மேம்படும். வாகன பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
மீனம்
சமூகத்திலிருந்து தனித்து இருப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.