Rasi Palan Today: 10 ராசிகளுக்கு இன்று படுஜோர்... 2 ராசிகளுக்கு மட்டும் கொஞ்சம் ஃபோர்... இது இன்றைய ராசி பலன்கள்!
Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 25 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!
நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்
இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை
பகல்- 3 மணி முதல் 4:30 மணி வரை
குளிகை:
பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை
எம கண்டம்:
காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
வடக்கு , பால்
சந்திராஷ்டமம்:
உத்திரட்டாதி
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஊக்கமும் கிடைக்கும். சக பணியாளர்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். போக்குவரத்தில் கவனம் தேவை. தலைவலி, சளி தொல்லைகள் இருக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தவும்.
ரிஷபம்:
பிறரிடத்தில் அன்பு செலுத்துவீர்கள். பிறரும் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள். வெளிநாடுகளிலிருந்து மகிழ்ச்சியான தகவல் வரலாம். பண வரவு இருக்கும். பங்கு சந்தைகளில் கவனம் தேவை. பிக்பாக்கெட் அபாயம் உள்ளது.
மிதுனம்:
நினைத்த அனைத்தும் நிறைவேறும். நஷ்டத்தில் சென்ற வியாபாரம் கூட லாபத்திற்கு திரும்பும். திக் திக் என எதிர்பார்த்த காரியங்கள், சுபமாக கைகூடும். பெற்றோர் உடல் நலக்குறைபாடு ஏற்படலாம். சுபச் செலவுகள் வந்து போகும்.
கடகம்:
ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். வீண் விரையங்கள் தவிர்க்கப்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் தொல்லை குறையும். பண விவகாரத்தில் இருந்த தடைகள் நீங்கம். சேர்த்து வைத்த சேமிப்புகள் கை கொடுக்கும்.
சிம்மம்:
கடுஞ்செற்களால் தேவையில்லாத துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். கணவன் அல்லது மனைவியின் வார்த்தைகள் உங்களை புண்படுத்தும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். பெற்றோர் மீது வெறுப்பு ஏற்படலாம்.
கன்னி:
இன்று அதிக கோபமுடன் காணப்படுவீர்கள். உங்கள் திட்டங்களை சிலர் முறியடித்து வெறுப்பு ஏற்றுவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமாகும். உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். இருப்பினும் உங்கள் மீதான நம்பிக்கையில் புதிய வாய்ப்புகள் வரும்.
துலாம்:
செய்யும் காரியத்தில் உறுதியாக இருப்பீர்கள். முடிந்த வரை யார் துணையும் இன்றி, நீங்களே அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். கணவன் அல்லது மனைவி மீது வருத்தம் வரலாம். ஆனால், அவர்கள் தான் உங்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். புதிய முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம்:
பண வரவு இருக்கும். வங்கி தொடர்பான விவகாரங்கள் சுபமாக முடியும். பணத்தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தோம் உதவி முன்வருவார்கள். கடந்தகால மனக்கசப்புகள் விலகும். நல்லவர்கள் நட்பு கிடைக்கும்.
தனுசு:
இல்லத்தில் இன்பம் கூடும் நாள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான நல்ல செய்திகள் வரலாம். கல்வியில் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். பொதுத்துறை, அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான பாதை பிரகாசமாக தெரியும்.
மகரம்:
உயர் அதிகாரிகள் உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். அவர்களின் பாராட்டை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு பயணத்திற்கான அறிகுறிகள் தெரியலாம். கடந்த சில நாட்களாக நிலவி வந்த காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடுகள் சரியாகலாம்.
கும்பம்:
உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவமனையில் இருப்பவர்கள் டிஸ்சார்ஜ் ஆவார்கள். குலதெய்வ, கோயில் வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் நிறைவு பெறும்.
மீனம்:
நண்பர்கள், குடும்பத்தார் , உறவினர்களுடன் மகிழ்ச்சியோடு இன்றைய பொழுதை கடத்துவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறலாம். உறவினர்கள் வருகை இருக்கும். செலவுகள் தவிர்க்க முடியாது; ஆனால் அவற்றை சமாளித்து விடுவீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்