மேலும் அறிய

Viruchigam Rasi: ஏற்றம், மாற்றம், முன்னேற்றம்! 5 கிரகங்களின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு அமோகம்!

5 கிரகங்களின் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி :

புதன் பகவான் உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், அஷ்டமாதிபதியும் ஆகி  உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீடான தனுசு ராசியில் பிரவேசிக்கிறார்.  லாபாதிபதி விருச்சிக ராசிக்கு இரண்டாம் வீட்டில் பிரவேசிக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் உங்களுடைய வார்த்தைக்கு மரியாதை  கூடும்.  இரண்டாம் வீடு சம்பாதிக்கும் பணத்தை பிரிப்பதால், நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும்  கட்டுக்குள் கொண்டு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உங்களுக்கு அஷ்டமாதிபதி அடுத்தவர்களின் படங்களை கையில் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.

குறிப்பாக தொழில்தான் புதிய முயற்சிகள் முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். தொழில் இருட்டுப்பில்லாமல் கிடைக்கும்.  புதன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களுடைய லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கக்கூடிய கேது பகவான் போல செயல்பட்டு எல்லாத்தையும் வெற்றி அனைத்திலும் மேன்மை, லாபம், மேன்மை போன்றவை உங்களுக்கு சிறப்பாக அமையப் போகிறது. புதன் பூராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது சுக்ரனின் நட்சத்திரமாகி உங்களுக்கு ஏழாம் வீடு மிகச்சிறப்பாக வேலை செய்யப்போகிறது.

தடைபட்ட திருமணங்கள் உடனடியாக கைக்கு வந்து சேரும். திருமண பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.  பகைவர்கள் நண்பர்களாக போகிறார்கள்.  பெரியோர்களின் ஆசி கிட்டும்.  புதன் உத்திராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது விருச்சிக ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தான அதிபதி நட்சத்திரத்தை வாங்கி இரண்டாம் வீட்டில் பிரவேசிக்கும் புதனால் ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்தாலும் அதன் மூலமாக லாபமே கிட்டும்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

சூரியன் பெயர்ச்சி :

டிசம்பர் 16ஆம் தேதி சூரிய பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான தனுசு ராசிக்கு பிரவேசிக்க போகிறார். உங்களுடைய ராசி அதிபதி  செவ்வாய் பகவானோடு சேர்ந்து தொழில் ஸ்தானத்தில் மிகப்பெரிய வலுப்பெற செய்யப் போகிறார்.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள்.  அரசு உத்தியோகத்துக்காக காத்திருக்கும் நபர்களுக்கு இது ஒரு பொற்காலம். குறிப்பாக அரசு தேர்வுகளில் எழுதி விட்டு  அதன் விளைவு எப்படி இருக்குமோ? என்று பயத்தோடு காத்திருந்தீர்கள். அந்த பயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சூரியனும், செவ்வாயும் ஒன்று சேர்ந்து தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலகட்டம். உங்களுக்கு அரசு தேர்வுகளில் வெற்றி. அரசு உத்தியோகம் போன்றவை மிக மிக சாதகமாக முடியப்போகிறது. 

பெரிய பெரிய தொழில்களில் முதலீடு செய்யும் காலமாகவும் இருக்கும்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றமான காலகட்டம் உங்களை குறித்து மேல் இடத்திற்கு தெரிய வந்து முக்கிய பொறுப்புகளில் அரசியல்  பதவிகளை உங்களைக் கொண்டு அலங்கரிக்கப் போகிறார்கள்.  சூரியன் செவ்வாய் ஒன்று சேர்ந்திருக்கும் காலகட்டத்தில் அரசாங்கத்தின் மூலமாகவே பணவரவு உண்டாகும்.  சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது  மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்த உங்களுக்கு, அந்த கனவு நினைவாக போகிறது.  சூரியன் சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிட்டும்.  தம்பதிகளுக்குள் சதா சண்டை போட்டுக் கொண்டு நீயா? நானா? என்று பார்த்திருந்த உங்களுக்கு  பிரச்சனைகள் அகன்று  நன்மைகள் கைக்கூலி வரப்போகிறது.  சூரியன் உத்திராட நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளை  உங்களின் மேல் அதிகாரி  அங்கீகரிக்கப் போகிறார்.

சுக்கிரன் பயிற்சி :

சுக்கிர பகவான் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் ஆகி டிசம்பர் 25ஆம் தேதி உங்களுடைய பன்னிரண்டாம் பாவமான துலா ராசி இருந்து உங்களுடைய ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார்.  சம்பாதித்த பணம் எங்கு சென்றது என்பது இதுநாள் வரை தெரியாமல் இருந்த சிலருக்கு  பணச் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தைரியத்தையும் ஆற்றலையும் சுக்கிரன் உங்களுக்கு கொடுக்கப் போகிறார்.  பொலிவு கூடும் காலகட்டமாக இருக்கும். தொலைந்து போன முகங்கள் எல்லாம் மலரப் போகிறது.  வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைத்து நீங்கள் துள்ளி குதித்து புதிய, புதிய செயல்பாடுகளில் ஈடுபட போகிறீர்கள்.  சுக்கிரன் உங்களுக்கு பணத்தை மட்டுமல்ல பெயரையும் புகழையும் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் அதற்கான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் மட்டும் வைத்திருந்தீர்கள் அல்லவா அந்த எண்ணங்கள் நினைவில் ஈடேற போகிறது.

செவ்வாய் பெயர்ச்சி :

செவ்வாய் பகவான் உங்களுடைய ராசியாதிபதியாகி டிசம்பர் 27ஆம் தேதி உங்களுடைய ராசியில் இருந்து உங்களுக்கு இரண்டாம் இடமான தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். தனுசு ராசி அப்பழுக்கற்ற ராசி. அந்த ராசியில் எந்த கிரகமும், நீச்சம் அடையாத காரணத்தால் அந்த ராசியில் இருக்கும் அத்தனை கிரகங்களும் நன்மையே செய்யும் என்று கிரந்த நூல்கள் கூறுகிறது.  அப்படி இருக்க உங்களுக்கு ராசியாதிபதியும் ஆறாம் அதிபதி ஆகி இரண்டாம் வீட்டு ஆன தனஸ்தானத்தில் பிரவேசிக்கும் போது மலை அளவு கடன் இருந்தாலும் கடுகளவு சிறுத்துப் போகும்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு இடத்தில் கடன் வாங்கி அதனை முழுமையாக அடக்கக்கூடிய காலகட்டமாகவும் இது இருக்கும்.  வீடு மனை போன்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

புதன் பெயர்ச்சி :

விருச்சிக ராசிக்கு லாபாதிபதியான புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து வக்கிரம் பெற்று மீண்டும் முயற்சிக்க ராசிக்கு உள் நுழைகிறார். இது பொற்காலம் லாவாதிபதி ராசியிலே அமர்வதால் அனைத்தும் வெற்றியாக முடியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget