Mesham Rasi: மேஷ ராசிக்காரர்களே! 5 கிரகங்களின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் இதுதான்!
டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்களின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு அவர்களது என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை கீழே காணலாம்.
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன. உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி :
மேஷ ராசிக்கு, புதன் டிசம்பர் 13ஆம் தேதி தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். உங்களுக்கு ஏழாம் அதிபதி 10 ஆம் அதிபதி லக்னத்தில் நுழைவதால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார். தடைபட்ட திருமணங்கள், தாமத திருமணம் போன்றவை கைகூடி வரும். உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரிய பகவான் டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசியில் நுழைகிறார். பாக்யாதிபதி லக்னத்தில் நுழைவதால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த அனைத்துமே நடந்து விடும். ஏற்கனவே குரு பகவான் ஐந்தாம் வீட்டிலிருந்து உங்கள் ராசியை வக்கிர நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒளி கிரகமான சூரியன் உங்களுடைய ராசியின் மேல் வந்து அனைவரது கவனங்களும் உங்கள் மீது இருக்கும்.
கலைத்துறையினருக்கு ஏற்றமான காலகட்டம் சினிமா, டிவி போன்ற துறையை சார்ந்தவர்களுக்கு ஒரு அற்புதமான காலம் என்றே கூறலாம். தகப்பனாருடன் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைக்கு வரும். சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நுழைகிறார். குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றினாலும் அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள நீங்கள் திறம்பட செயல்படுவீர்கள்.
வார்த்தைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை மருத்துவர் இடத்தில் காண்பித்து சரி செய்து கொள்ளலாம். ஏழாம் அதிபதி எட்டில் மறையும் போது வாழ்க்கை துணையுடன் சிறு சிறு தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவலை வேண்டாம் ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு பெரிய தொந்தரவுகளை தர மாட்டார். செவ்வாய் டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசிக்கு உள் நுழைகிறார் ராசி அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருப்பது மிக மிக யோகமான காலம். லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து மூன்று நட்சத்திரங்களை கடந்து வரப் போகிறார்.
செவ்வாய் மூல நட்சத்திரத்தில் :
செவ்வாய் மேஷ ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கக்கூடிய கேதுவின் மூல நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது இருக்கின்ற கடன்களை அடைப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து முடிப்பீர்கள். மலை அளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு சிறிதாய் போகும். சிறிய கடனை அடைப்பதற்காக பெரிய இடத்தில் கேட்ட தொகை உடனடியாக கைக்கு வரும்.
ஆறாம் இடத்தில் இருக்கும் கேது நட்சத்திரத்தில் செவ்வாய் பயணம் செய்யும்போது உடல் உஷ்ணத்தால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் விலகும். மருத்துவத்தின் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். எத்தனை பெரிய எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு கொண்டு வந்தாலும் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.
செவ்வாய் பூராடம் நட்சத்திரத்தில் :
செவ்வாய் சுக்கிரனுடைய நட்சத்திரமான தூரத்தில் பயணம் செய்யும் பொழுது. உங்களுடைய ராசிக்கு இரண்டுக்கும் ஏழுக்கும் அதிபதி சுக்கிரனுடைய சாரத்தில் செவ்வாய் பயணிக்கும் போது அனைத்தும் நன்மையாகவே முடியும். வெளிநாடு வெளியே தேசம் என்று வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு பிரமாதமான காலகட்டமாகவே அமையும். சுக்கிரன் டிசம்பர் 25ஆம் தேதி விருச்சிக ராசிக்கு உள்ள நுழையும் பொழுது செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் உங்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை. அதேபோல் இரண்டிற்கும் ஏழுக்கும் அதிபதி சுக்கிரன் ஆக்கி அவருடைய சாரத்தில் செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தலத்தில் நிற்கும் பொழுது நிலம் வீடு தொடர்பான சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும்.
செவ்வாய் உத்திராடம் நட்சத்திரத்தில் :
செவ்வாய் பகவான் உத்திராட நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியனாகி அவருடைய நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது நிச்சயமாக உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். ராசி அதிபதி செவ்வாய் ஐந்தாம் அதிபதி சாராம் வாங்கி இருக்கும்பொழுது பூர்வீகம் எண்ணம் எழுத்து ஆற்றல் என்று அனைத்தும் கைகூடும். ஒன்பதாம் பாவத்தில் ஐந்தாம் பாவம் உடன் தொடர்பு பெறும் பொழுது நிச்சயமாக முன்னோர்களின் ஆசிர்வாதம் கிட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள் புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். ஐந்து வருடத்திற்கு மேலாக ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கி தவிக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வரப்போகிறது.
டிசம்பர் 28 விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் புதன்:
புதன் மீண்டும் டிசம்பர் 28ஆம் தேதி விருச்சிக ராசிக்கு அதாவது உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறார் அந்த காலகட்டத்தில் சொந்தத் தொழில் செய்வோர் தொழிலில் அதிக லாபம் பெறலாம். தொழில் நிமித்தமாக யாருக்கேனும் கடன் தேவைப்பட்டால் டிசம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு கடன் பெரிய தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மேஷ ராசிக்கு அனுகூலமான காலகட்டத்தில் பல கிரகங்கள் செயல்படுவதால், வருகின்ற டிசம்பர் மாதம் முழுவதும் ஏற்றமான கால கட்டமாகவே இருக்கும். அதேபோல் 5 கிரகங்களும் மிக வலிமையான கிரகங்கள் என்பதால் அவைகள் எட்டிற்கும், ஒன்பதற்கும் மாறி, மாறி அமரும் போது சற்று சறுக்கல்களை சந்தித்தாலும் நிதானமான வெற்றியை பெறுவதற்கான காலகட்டம். ஒட்டுமொத்தமாக ஐந்து கிரக பெயர்ச்சி மேஷ ராசிக்கு மனதிற்கு நிறைவான சந்தோஷத்தை தரக்கூடிய மாதமாகவே அமையப்போகிறது. வாழ்த்துக்கள் வணக்கம் !!!