மேலும் அறிய

Magaram Rasi: மகர ராசிக்காரர்களே 5 கிரகங்களின் பெயர்ச்சியால் உங்களுக்கு ஏற்றமா? மாற்றமா? இதோ முழு விவரம்!

மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் 5 கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பதை கீழே காணலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி:

மகர ராசிக்கு ஆறாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியுமான புதன் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் டிசம்பர் 13-ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். புதன் பகவான் புத்தி கூர்மைக்கு சொந்தக்காரர். உங்களுடைய கோகருண சத்ரு எதிரி ஸ்தான அதிபதி பனிரெண்டாம் வீட்டில் நுழைவதால்,  மலையளவு கடன் இருந்தாலும் கடுகளவு சிறுத்துப் போகும்.  நீண்ட நாட்களாக நாள்பட்ட கடன்களில் அவதிப்பட்ட உங்களுக்கு வேறொரு இடத்தில் பணம் கிடைக்கும் உங்களின் கடன் அடையப் போகிறது.  அதன் காரணங்கள் தினமும்  தொல்லை கொடுத்து வந்த உங்களுக்கு அந்தத் தொல்லைகள் நீங்கி புத்துணர்வு பெற போகிறீர்கள். 

எண்ணமும், செயலும்,  சிறந்த ஆற்றலுடன் செயல்படபோகிறது.  நாள்பட்ட நோயிலிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது.  குறிப்பாக நீண்ட நாட்களாக நோயின் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு அந்த நோயின் தாக்கம் மருத்துவமனையின் மூலமாகவோ, மருந்துகள், மூலமாகவோ  விடுதலை கிடைக்கும்.  பாக்கியாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் நுழையும் போது நீண்ட தூர பிரயாணம்.  இருக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று  அங்கே வாசம் செய்வது போன்ற  வித்தியாசமான பலன்களை சந்திக்க வேண்டும்.

புதன் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் மூல நட்சத்திரத்தில் முடியும் பொழுது பாக்கியஸ்தானத்தில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் கேதுவின் நட்சத்திரமாக இருப்பதால் நிச்சயமாக அது வெற்றியை கொண்டு வரும்.  அதேபோல புதன் பகவான் பூராட நட்சத்திரத்தில் நுழையும் பொழுது உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதி, பத்தாம் அதிபதியாகி  12ம் வீட்டில் அவர் பிரதேசிக்கும் சமயத்தில் வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வருவது சிறப்பை தரும்.  புதன் பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது சூரியன் ஒரு மருத்துவ கிரகம் என்பதால் நாள்பட்ட நோய்களுக்கு அவர் மிகப்பெரிய விடுதலையை கொண்டு வருவார்.

சூரியன் பெயர்ச்சி:

டிசம்பர் 16ஆம் தேதி சூரிய பகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார்.  உங்களுடைய ராசிக்கு அஷ்டமாதிபதி 12ஆம் வீட்டில் நுழையும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில் மிகப்பெரிய ராஜயோகம் நடக்கப் போகிறது.  தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு செல்ல போகிறது. மகாபாரதத்தில் அர்ஜுனனின் தலையை எடுக்க வேண்டும் என்று வந்தபோது, அவருடைய தலைப்பாகை தட்டி அவருடைய உயிரை காப்பாற்றியது போல எவ்வளவு பெரிய பிரச்சனை உங்களை நோக்கி வந்தாலும் அது உங்களை சேதப்படுத்தாமல் உங்கள் தலைப்பாகையோடு செல்ல போகிறது. 

சூரிய பகவான் உங்களுக்கு நன்மையை கொண்டு வருவார்.  விபத்து, வம்பு வழக்குகளுக்கு சொந்தக்காரரான அஷ்டமா அதிபதி 12 ஆம் வீட்டில் நுழையும்போது மறைந்திருந்த எதிரிகள் கண்ணுக்குத் தெரிவார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  மகர ராசிக்கு பொதுவாக  சூரியன் அஷ்டமாதிபதியாக வந்தாலும்  தனுசு  ராசிக்குள் நுழையும் பொழுது அவை ஒன்றுமே எந்த கிரகத்தையும் எப்பேர்ப்பட்ட சமயத்தையும் செய்யாது என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சுக்கிரன் பெயர்ச்சி :

சுக்கிர பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் ஆகி உங்களுக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்குள் நுழைகிறார்.  புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர சந்தானம் உண்டாகப் போகிறது. நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டவர்களுக்கு மிகச் சிறப்பாக திருமணம் கைகூட போகிறது.  தொழிலில் நஷ்டம் எந்த வேலை செய்தும் பலன் இல்லை எவ்வளவோ நிறுவனங்களில் வேலை தேடி அலைந்து விட்டேன், வேலை கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வரும். 

மகர ராசிக்கு பத்தாம் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில், அதுவும் விருச்சிக ராசியில் வீட்டில் அமரும்பொழுது அரசு, அரசு அதிகாரிகள், அரசு வழியில் முன்னேற்றம், அரசாங்க பதவி தேடி வருவது, அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது போன்ற மிகப்பிரமாண்டமான பலன்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்.  சுக்கிர பகவான் உங்களுக்கு ஐந்தாம் அதிபதியும் ஆகிறார். ஐந்தாம் வீடு, எண்ணம், எழுத்து, செயல், வெற்றி உங்களுடைய சிந்தனையை குறிக்கும்.

அப்படிப்பட்ட ஐந்தாம் அதிபதி லாப ஸ்தானத்தில் நுழையும் பொழுது  எப்பேர்பட்ட சிக்கல்களையும் உங்களுடைய புத்தி கூர்மையின் மூலமாக நீங்கள் தகர்த்தெறிந்து வெற்றிவாக சுட போகிறீர்கள்.  ஏற்கனவே திருமணம் நடந்தேறிவிட்டது. ஆனால், அந்த திருமணம் வழக்கில் நடந்து கொண்டிருக்கிறது என்று  மனக்கசப்பாக இருந்த உங்களுக்கு,  அதிலிருந்து விடுதலை கிடைத்து தம்பதியர் ஒன்று கூறுவீர்கள். ஒரு சிலருக்கு இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.  புத்திர பாக்கியத்திற்கான சிறப்பான மாதமாக டிசம்பர் மாதத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பிள்ளைகளால் ஆதாயம் பிள்ளைகளால் முன்னேற்றம் போன்றவை இந்த டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் உங்களுக்கு நடந்தேற போகிறது.

செவ்வாய் பெயர்ச்சி :

செவ்வாய் பகவான் மகர ராசிக்கு நான்காம் அதிபதியும் லாவாதிபதியும் ஆகி உங்களுடைய ராசிக்கு 12-ஆம் வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார். டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியின் போது உங்களுக்கு நல்ல ராஜயோகமான பலன்களை கிடைக்கப் போகிறது. நான்காம் வீடும் 12ஆம் வீடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால்  அந்த இரு வீடுகளும் உங்களுக்கு நன்மையை கொண்டு வரும்.  குறிப்பாக லாபத்தை மட்டுமே செய்யக்கூடிய செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் பிரவேசிக்கும் பொழுது எவ்வளவு  நீங்கள் பணத்தை செலவு செய்தாலும் அந்த அத்தனை பழங்களும் உங்களுக்கு இரண்டு மடங்காய் கைக்கு திரும்பி வரும்.  சிலருக்கு எதிர்பாராத தன வரவு தன லாபம் உண்டு  தொழில் ரீதியாக வெற்றி எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களுக்கு வெற்றி திருமகள் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கப் போகும் நேரம் வந்துவிட்டது.  மொத்தத்தில் இந்த செவ்வாயின் பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த லாபகரமான பெயர்ச்சியாகவே அமையும்.  குறிப்பாக வீடு வாகனம் போன்ற விஷயங்களில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தையும் லாபத்தையும் கொண்டு வரப் போகிறது.

புதன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார் :

புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீடான விருச்சிக ராசிக்குள்  நுழைகிறார். அந்த காலகட்டத்தில் நிச்சயமாக நாள்பட்ட நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.  உங்களுடைய கடன் தொல்லைகள் அன்று உங்களுக்கு நன்மை கிடைக்கும்.  நீண்ட நாட்களாக நீங்கள் நிறைவேற வேண்டும் என்று காத்திருந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு இந்த டிசம்பர் மாதத்தில் நிறைவேற போகிறது.  வாழ்த்துக்கள் வணக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget