மேலும் அறிய

திருவண்ணாமலை தீபத்திருவிழா - பக்தர்கள் அனுமதிக்கான இணையதள முன்பதிவு இன்று தொடக்கம்

நவம்பர் 10 மற்றும் 16 ஆகிய 2 தேதிகளில் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையும் அதேபோல் மற்ற தினங்களில் தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை அருணாச்சலேஷ்வரர் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டு நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வழிகாட்டு நெறிமுறைகள் தளர்வுகளுடன் நடப்பில் உள்ளதால் கடந்த ஆண்டைப் போல 2வது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.   

திருவண்ணாமலை தீபத்திருவிழா - பக்தர்கள் அனுமதிக்கான இணையதள முன்பதிவு இன்று தொடக்கம்

தீபத் திருவிழா நடைபெற உள்ள நவம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, தீபத் திருநாள் மற்றும் பௌவுர்ணமி நாட்களான நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை உள்ள நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தினந்தோறும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3000 உள்ளூர் பக்தர்களும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 13 ஆயிரம் பக்தர்கள் என்ற அளவில் கட்டணம் இல்லாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட கோவில் நோய்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யப்படுவர் என்றும்

வெளிமாவட்ட மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்திட திருக்கோவில் இணையதளமான www.arunachaleswarartemple.tnrce.in வாயிலாக இணையதள முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல் இன்றைய தினம் 6 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர் என்றும்,  தீபத் திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் திருக்கோவில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடைபெறும் என்றும், குறிப்பாக நவம்பர் 16 ஆம் தேதி மாடவீதிகளில் நடைபெற உள்ள 5 தேரோட்ட நிகழ்வினையும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் திருக்கோவில் வளாகத்தில் உள்ளேயே ஐந்தாம் பிரகாரத்தில் ஆகம விதிகளின்படி நடைபெறும் என்றும்,

திருவண்ணாமலை தீபத்திருவிழா - பக்தர்கள் அனுமதிக்கான இணையதள முன்பதிவு இன்று தொடக்கம்

நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துடன் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் தீபத் திருவிழா நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதி ஏதும் கிடையாது என்றும் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை மற்றும் மாட்டுச் சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 10 மற்றும் 16 ஆகிய 2 தேதிகளில் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையும் அதேபோல் மற்ற தினங்களில் தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என்றும் திருக்கோவிலுக்கு வருபவர்கள் அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள், திருக்கோவில் இணையதளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் பக்தர்கள் மகா தீபத்தை தங்களது வீடுகளிலிருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள்  கிரிவலப்பாதையில் எந்த ஒரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும் கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் ஆட்சியர் விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget