2024 Rasi Palan: 2024-ஆம் ஆண்டு இந்த 3 ராசிக்கார்களுக்குத்தான் ஜாக்பாட்! யாரு தெரியுமா?
New Year Rasi palan : 2024ம் ஆண்டு மூன்று ராசிக்கார்களுக்கு அமோகமான ஆண்டாக மாறப் போகிறது. அது எந்தெந்த ராசியினர் என்பதையும், அதன் பலன்களையும் கீழே காணலாம்.
New Year Rasipalan: 2024
மேஷம் :
2024 உங்களுக்கு ஒரு அற்புதமான காலகட்டமாக அமையப்போகிறது. இது நாள் வரையில் நீங்கள் சம்பாதித்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போயிருக்கும். ஆனால் 2024 ஆம் ஆண்டு நீங்கள் சம்பாதித்த பணம் உங்களுக்கு மிகப்பெரிய சொத்துக்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. அசையும் சொத்து அசையா சொத்து என்று அனைத்துமே உங்களை வந்து சேரப் போகிறது.
மேஷ ராசிக்கு பாக்யாதிபதியான குரு பகவான் இரண்டாம் இடத்தில் வந்து அமரும்போது, நீங்கள் எதிர்பார்த்த நீங்கள் ஆசைப்பட்ட பணத்தை ஜாக்பாட்டாக பெறப் போகிறீர்கள். தந்தையார் வழி சொத்துக்கள் உங்களைத் தேடி வரப்போகிறது. நீண்ட நாட்களாக கனவு கண்டிருந்த மாளிகை வீட்டை கட்டப் போகிறீர்கள். சுப காரியங்களுக்கு நேரத்தை செலவிடப் போகிறீர்கள். வீட்டில் ஒரே பிரச்சனை சண்டை வம்பு வழக்கு என்று இப்படியே என் காலம் போய்விடுமோ? என்று ஏக்கத்தோடு இருந்த உங்களுக்கு வந்துவிட்டது பொன்னான காலம்.
ஒரு பெரிய தொகையை செலவு செய்யலாம் என்று எடுத்து வைத்தீர்கள் அல்லவா? அது செலவாக உங்களுக்கு நடக்கப் போவதில்லை. அது வரவாக வரப்போகிறது. தந்தை வழி உறவு மூலம் உங்களுக்கு பெரும் பணம் வந்து சேர போகிறது. மேஷ ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு வந்து சேர வேண்டியதை நிச்சயமாக கையில் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார். நீடித்த நிலையான பணத்தை நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள் 10 பேருக்கு நீங்கள் அன்னதானம் செய்யுங்கள் என்று நான் கூறவில்லை உங்களால் முடிந்த சாப்பாடு அப்படி அதுவும் முடியவில்லை என்றால் பிஸ்கட் பாக்கெட் கொடுத்து கூட நீங்கள் தானம் செய்யலாம். முருகப்பெருமானை வணங்கி வர எண்ணங்கள் இடியும்.
துலாம் ராசி:
2024 துலாம் ராசிக்கு ஒரு அற்புதமான காலம். கடந்த ஒரு வருடங்களாக உங்களுடைய ராசியில் கேது பகவான் அமர்ந்து உங்களுக்கு வரவேண்டிய சில நல்லவைகளை தடுத்து இருப்பார் கிடைக்க வேண்டிய சில அற்புதமான பலன்களை தாமதமாக தந்திருப்பார். நீண்ட நாட்களாக ஒரு லக்சரி கார் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களின் எண்ணங்கள் ஈடேற போகிறது. இரண்டடுக்கு மாடி கட்டி குடியேற வேண்டும் என்று நீண்ட நாட்களாக நீங்கள் கனவு கண்டீர்கள் தானே அந்தக் கனவும் தற்போது நினைவாக போகிறது.
அஷ்டமத்தில் வரப்போகிற குரு உங்களுக்கு ஆறாம் வீட்டு அதிபதி கூரையை பிரித்து கொண்டு கொட்டப் போகிறது பணம். அஷ்டமாதிபதி கெட்டது தானே செய்வார் என்று பல ஜோதிடர்கள் கூறுவதும் எட்டில் உங்களுக்கு குரு வந்துவிட்டது அவ்வளவுதான் என்று மிரட்டுவது எண்ணி நீங்கள் கலங்க வேண்டாம். அஷ்டமத்து குரு உங்களுக்கு ஆறாம் அதிபதியாகி அவர் நின்ற ஸ்தானத்திற்கு பதினோராம் வீட்டு அதிபதி லக்னத்தை நோக்கி வரும் பொழுது பல நாள் கனவுகள் நிறைவேறும் காலம் என்றே கூறலாம். திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். வீடு வண்டி வாகனம் ஏற்பாடுகள் ஜோராக நடக்கப் போகிறது. காலபைரவரை வழிபட்டு வர உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
மீன ராசி :
2024 மீன ராசிக்கு மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரப் போகிறது. லக்னத்தில் ராகு இருக்கிறார் உங்களை படாத பாடு படுத்துவார் என்று கூறுபவர்களின் கூற்றுக்களை நம்பாதீர்கள். ராகுவுக்கு இரண்டு வீடுகள் மிகவும் பிடித்தமான வீடு ஒன்று ரிஷபம் மற்றொன்று மீனம். இந்த இரண்டு ராசியிலும் ராகு சாதுவாக மேன்மை தரக்கூடியவராக சிந்தனை சிற்பியாக வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராக செயல்படுவார். அப்படிப்பட்ட ராகு மீனத்தில் இருந்து உங்கள் ராசியிலேயே செயல்படுவதால் குரு எங்கெங்கெல்லாம் செல்கிறாரோ? அங்கே எல்லாம் ராகு மீன ராசியிலிருந்து குருவின் பலன்களை வாரி வழங்குவார்.
அப்படிப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதத்தில் குரு இரண்டாம் இடத்தில் பிரவேசிப்பதால் ராகுவும் லக்னத்திலிருந்து இரண்டாம் இடமான தனுஷ் தானத்திற்குரிய அனைத்து வேலைகளையும் செய்வார். நீங்களே செலிபிரிட்டியாக மாறப்போகிறீர்கள். உங்களை வைத்து பணம் கொட்ட போகிறது. உங்களால் பணம் கொட்ட போகிறது. உங்களுடைய மூளையை பயன்படுத்தி பணத்தை பெருக்கப் போகிறீர்கள். வீடு மனை வாகனம் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய தொழில் ஆரம்பித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட போகிறீர்கள். புதிய தொழில் மூலமாக உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கப் போகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேர குரு பகவானே ஏழன்தூறும் வழிபடுவது சிறந்தது.