New Year Rasi Palan 2023: புத்தாண்டு ராசி பலன்கள்....எந்த ராசிக்காரர்கள் சொத்து வாங்குவீர்கள்.. எந்த ராசிக்கு அமோகம்?
New Year 2023 Rasi Palan in Tamil: 2023ஆம் ஜனவரி மாதம் சனிபகவான் இடப்பெயர்ச்சி அடையும் நிலையில், எந்தெந்த ராசியினருக்கு யோகம் அடிக்கும், புத்தாண்டு ராசிபலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்!
மேஷ ராசி நேயர்களே!
மேஷ ராசிக்கு அருமையான வாழ்வு உண்டாகக்கூடிய நல்ல ஆண்டாக இருக்கப்போகிறது. அஸ்வினி நட்சத்திரம் என்பது மேஷ ராசி. மேஷ ராசியில் தான் இந்த ஆண்டு தொடங்கும் அருமையான தருணம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுப காரியங்கள் நடக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கைக்கூடும் ஆண்டு.
ரிஷப ராசி நேயர்களே!
மறைமுகமான முதலீடுகள் தேடும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்காக சில சுப காரியங்கள் செய்வீர்கள். பொன், பொருள், ஆபரணங்கள் சார்ந்த நல்ல காரியங்களுக்கான சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கும் அமோகமாக இருக்கும். மன வருத்தத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் இருக்கும். இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்.
மிதுன ராசி நேயர்களே!
இந்த ஆண்டு நீங்கள் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவருவீர்கள். முக்கியத்துவம் பெறக்கூடிய நபராக இந்த சமூகத்தினரால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பட்டம், பதவி, புகழ், அந்தஸ்து ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு பிரயாணம் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வத்தின் துணை பக்கபலமாக இருக்கும். பூர்வீக சொத்து கை வந்து சேரும்.
கடக ராசி நேயர்களே!
உடல்நிலையில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. பிறர் செய்யக்கூடிய குற்றங்களுக்கு நீங்கள் பழி ஏற்கக்கூடிய நிலை ஏற்படலாம். முக்கியமான வேலையை இழந்து புதிய வேலையை பெறும் வாய்ப்புகள் உள்ளது. உபதேசம் செய்யக்கூடிய தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கும். பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செய்யுங்கள். மிர்திஞ்ச ஹோமம் ஒருமுறை உங்கள் வீடுகளில் செய்தால் கண்டிப்பாக சுப காரியங்கள் நடந்தேறும்.
சிம்ம ராசி நேயர்களே!
மனப்பூர்வமான சந்தோஷம், குழந்தை பாக்கியம் ஏற்படும். தாம்பத்திய உறவு மேம்படும். பெண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். ஆலயத் திருப்பணிகளுக்கு நீங்கள் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உடல்நல பிரச்னைகளில் இருந்து வெளிவரக்கூடிய அமோகமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும். கணவன் - மனைவிக்குள் இணக்கம் நன்றாக இருக்கும். சுய தொழில் தொடங்கக்கூடிய அருமையான காலம் வந்துவிட்டது.
கன்னி ராசி நேயர்களே!
கண்டிப்பாக லோன் வாங்கி விடுங்கள். வீடு விஸ்தாரணம் செய்யுங்கள். இருக்கும் இடத்தில் அருமையான வீடு கட்டக்கூடிய பாக்கியம் ஏற்படலாம். வேலை வெளுத்து வாங்கும் அதற்கேற்றபடி சன்மானமும் கிடைக்கும். ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே!
இந்த ஆண்டு மனப்பூர்வமான சந்தோஷம் கிட்டும். கலை உலகம் சார்ந்த நபர்களுக்கு யோகமான நாள். மூதாதையர் சொத்து வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பல நாள் தட்டிப்பொய்க்கொண்டிருந்த வாய்ப்புகள் வந்து சேரும். கடன் நீங்கும். சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு அமோகமான ஆண்டாக மாறப்போகிறது.
விருச்சிக ராசி நேயர்களே!
வீடு, வண்டி, வாசல், சொத்து சேரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சொந்தக்காரகளிடம் தூரமாக இருங்கள். சொந்த ஊரை விட்டு வெளியேறினால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். ஊரில் இருக்கும் வரை பிரச்னைகள் வந்து கொண்டிருக்கும். முக்கியமான நபர் உங்களுக்கு எதிரியாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிறைய பொருளாதாரத்தில் தட்டி எடுக்கக்கூடிய அமோகமான ஆண்டாக அமையும்.
தனுசு ராசி நேயர்களே!
எல்லாவிதமான முயற்சிகளும் தத்ரூபமாக நடக்கும். இடமாற்றம் நடக்கும். சகோதரர்களிடையே உள்ள பிரச்னைகள் நிவர்த்தி ஆகும். பணம் பொருளாதாரத்தில் மாற்றம், முன்னேற்றம் நடக்கும். ஆன்லைன், வங்கி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். முக்கியமான கடனை அடைத்து புதிய பொருள் வாங்கும் அம்சங்கள் அற்புதமாக உள்ளது.
மகர ராசி நேயர்களே!
பணம், பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கேட்ட இடத்தில் பணம் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு அது வராமல் போகலாம். உபதேசம் செய்யக்கூடிய ஆசிரியர்களுக்கு அற்புதமான காலம். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். அனைத்தையும் சமாளிக்கக்கூடிய வல்லமையை ஆஞ்சநேயருக்கு உள்ளது. அவரை வழிபடுங்கள்.
கும்ப ராசி நேயர்களே!
ஜென்ம சனி படாதபாடு படுத்தும் என்று சொல்வார்கள். ஆனால் உங்களுக்குத் தேவையான முக்கியமான விஷயம் ஒன்று ஈடேறும். புதிய வேலைவாய்ப்பு அமையும். பூர்வீக சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கு அமோகமாக இருக்கும். கடனை அடைப்பீர்கள். மனது நிம்மதி இருக்கக்கூடிய காலக்கட்டம் இருக்கும். ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அற்புதமான மாற்றங்கள் இருக்கும்.
மீன ராசி நேயர்களே!
அனைத்தையும் ரகசியமாக வைத்து சாதியுங்கள். வெளியே சொல்லிவிட்டீர்கள் என்றால் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும். பிள்ளையார்பட்டி கணபதியை வழிபடுவது உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். கஷ்டப்படும் குழந்தைகளுக்கு தான, தர்மங்கள் செய்வது நன்மை பயக்கும். விரயங்கள் அதிகம் நடக்கும். உடல்நிலையில் கவனமாக இருங்கள். பணம் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். அமோகமான ஆண்டாக கண்டிப்பாக இருக்கும்.