மேலும் அறிய

Mesham Rasi: மேஷ ராசிக்காரர்களே! அடுத்த 3 மாதம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன? ஜோதிடரின் கணிப்பு இதோ!

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு அடுத்த மூன்று மாதங்கள் அதாவது வரப்போகிற 90 நாட்கள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி வாசகர்களே,

உங்களுடைய ராசிக்கு அடுத்த மூன்று மாதங்கள் அதாவது வரப்போகிற 90 நாட்கள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம். ஏற்கனவே 12 ராசிகளுக்கு 2024ம் ஆண்டுக்கான முழு ஆண்டு பலனை நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால்  குறிப்பாக மூன்று நாட்கள் மட்டும் கவனம் செலுத்துவது எதனால்  குருவினுடைய சஞ்சாரம் ஒவ்வொரு ராசிக்கும் வருகின்ற 3 மாதத்திற்கு இது போன்ற பலன்  தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பார்க்கலாம்.

ஜனவரி,  பிப்ரவரி,  மார்ச்  வருடத்தின் ஆரம்பமே  உங்களுக்கு அமர்க்களமாக இருக்கப் போகிறது.  இதற்கான காரணத்தை கூறுகிறேன்,  வருட கிரகங்கள் என்று  இரண்டு பெரிய கிரகங்களான  குருவையும் சனியையும் குறிப்பிடலாம்.  அப்படிப்பட்ட குரு  உங்கள் ராசிக்கு  புது வருடத்தின் முதல் மூன்று மாதங்களில்  உங்கள் ராசியான மேஷத்திலே அமர்கிறார்.  

ராசியில் குரு அமர்ந்தால் என்ன பெரிய மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்  2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் பிரவேசித்தார்  அதன் காரணமாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகளை  சொல்லி தீர்க்க முடியாது.  2024 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதத்தில் மேஷ ராசியில் அமர்ந்து ஏழாம் வீடான துளத்தை பார்ப்பதால்  பகைவர்கள் நண்பர்களாவார்கள்,  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும்.

தாமதமான திருமணம் கைகூடும் :

மேஷ ராசியில் பலவிதமான வயதினர் இருக்கக்கூடிய  சூழ்நிலையில்  திருமண வயதை அடைந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுக்கான திருமண காலம் வந்துவிட்டது,  2024 முழு வருடம் உங்களுக்கான திருமண காலம் தான்.  வீட்டில் பேச்சுவார்த்தை கூட நடத்த ஆரம்பிக்கவில்லை என்று  எண்ணியிருக்கும் உங்கள் எண்ணங்கள் திருமணம் வரை கைகூட போகிறது.  ஒருவேளை 2023 ஆம் ஆண்டு திருமண பேச்சு வார்த்தைகள் நடந்து, ஆனால் அது திருமணம் வரை செல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிப் போய் இருக்கலாம்,  அப்படி தள்ளி போன உங்களுடைய திருமணம்  மிக விரைவில் நடக்கப் போகிறது.

தொழில் ரீதியாக எப்படி இருக்கப் போகிறது ?

 மேஷ ராசிக்கு பத்தாம் இடம் சனியினுடைய வீடு அதாவது மகர ராசி. மகர ராசிக்கு  அதிபதியான சனிபகவான் கும்ப ராசியில் அதாவது மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுடைய ராசிக்கு லாப வீடு. நான் இப்படி நினைக்கவே இல்லை; அது மிகப் பிரமாதமாக நடந்து இருக்கிறது; நான் வேலை சிறியதாக முடியும் என்று நினைத்தால் அது பிரம்மாண்டமாய் பெரியதாக நடந்து எனக்கு பல முன்னேற்றங்களை கொடுத்திருக்கிறது  என்று வாய் பிளக்கும் அளவிற்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட போகிறது.  பாக்யாதிபதி என்று சொல்லக்கூடிய குருபகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார் .

அவர் உங்களுக்கு 12 ஆம் வீட்டு அதிபதியும் கூட  தொழில் ரீதியாக மேஷ ராசி நபர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கணிசமான வெற்றியை பெறத்தான் செய்யும். குறிப்பாக நீங்கள் இருக்கும் வீட்டில் இருந்து அண்டை மாநிலம் அல்லது மாவட்டம் அல்லது வெளிநாடு வெளி தேசம் தூரதேசம் போன்ற எந்த பெரிய நிலத்தை நீங்கள் எடுத்து வைத்தாலும் அதில் நீங்கள் வெற்றி அடையத்தான் போகிறீர்கள்.

 உங்களுடைய தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டிற்கு  நான்காம் வீட்டில் குரு பகவான் நபர் வந்தால் தொழில் ரீதியாக இடம் மாறுதல் நிச்சயமாக நடக்கும்.  குறிப்பாக  நீங்கள் சிறிய அறையில் ஒரு  சாதாரண வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், தற்போது நீங்கள் மாறுகின்ற இடம் பெரிய அறையாகவும் இருக்கலாம்  அல்லது மிகப்பிரமாண்டமான தொழிற்சாலையாக தொழிலாகமாகவும் இருக்கலாம்.

 ஆனால் தொழில் ரீதியான மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் உங்களுடைய ஜாதகத்தின் தசா புத்தி படி அது நல்ல மாற்றமாகவும் இருக்கலாம் அல்லது சுமாரான மாற்றமாகவும் இருக்கலாம்.  ஆனால் மாற்றம் என்பது நடைபெறத் தான் போகிறது.  உங்களுடைய பத்தாம் வீட்டிற்கு மூன்றாம் அதிபதி ஆன முயற்சிகளின் வெற்றிக்கு அதிபதி குரு பகவான் நான்காம் வீட்டில் அமர்வதால்  தொழில் முன்னேற்றம்  மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் லாபம்  கிட்டப் போகிறது.  லக்னத்தில் குரு பகவான் அமர்வது நிச்சயமாக  தம்பதியர்களுக்கும் சிறுசிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும், ஆனால் அவையெல்லாம் பெரிதாக ஒன்றும் உங்களை பாதிக்க போவதில்லை. நீண்ட தூர பிராயணங்கள் அல்லது உள்ளூரிலேயே பிரயாணங்களை மேற்கொள்ளுதல் போன்ற பிரம்மாண்டமான பலன்கள் உங்களுக்கு நடைபெறப் போகிறது.

குழந்தை பேறு கிடைக்கப் போகிறது :

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது அல்லது தற்போது தான் திருமணம் நடந்து உள்ளது என்று நீங்கள் எப்படி திருமண பந்தத்தில் இணைந்து இருந்தாலும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிக்கு ஒரு நல்ல செய்தியை நான் கூறப்போகிறேன்,  வீட்டில் மழலைச் சத்தம் கேட்கப் போகிறது. மிக விரைவில் குழந்தை செல்வம் உங்களுக்கு உண்டாகி அதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

குரு மேஷ ராசியான உங்கள் ராசியில் அமர்ந்து உங்களின் ஐந்தாம் வீடான சிம்மத்தை பார்வையிடுவதால் புத்திர பாக்கியம் தள்ளிப் போயிருந்தாலும் புத்திர பாக்கியமே கிடைக்காமல் போகும் என்ற சூழ்நிலை இருந்தாலும் கூட  மிக விரைவில் மழலைச் செல்வத்தின்  மகிழ்ச்சி திளைக்க  போகிறீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget