மேலும் அறிய

கேதுவின் நட்சத்திர பாத சஞ்சாரம்! "அஸ்த நட்சத்திரம்" 2- ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் "கேது" உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?

வாருங்கள் உங்கள் ராசிக்கு கேதுவின் அஸ்த நட்சத்திர இரண்டாம் பாத பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்....

 
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே  கேதுவின் நட்சத்திர பாத  பயிற்சி பற்றி பார்க்க போகிறோம்  இதனால் வரையில் கேது அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் சஞ்சாரம் செய்து வந்தார். ஆனால் தற்போது அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.   என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது  அதே நட்சத்திரத்தில் தான் கேது சஞ்சாரம் செய்யப் போகிறார். அஸ்த நட்சத்திரம்  என்று நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் கேதுவின்  நட்சத்திரம் பாதம் மாற்றம் கூட மிகப் பெரிய யோகங்களை சிலருக்கு கொண்டு வரும். காரணம்  நீங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட டிகிரியில் பிறந்திருப்பீர்கள். அந்த டிகிரிக்கு  கொல்சாரத்தில் பயணிக்க கூடிய கேது வரும் பொழுது தான் யோகங்களை கொண்டு வருவார்.   அப்படியான யோகங்கள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். நான் கூறப்போகின்றவை பொது பலன்களே மற்றபடி உங்களுடைய ஜாதகங்கள் தான் 100% உங்களுக்கு கை கொடுக்கும்.  வாருங்கள் உங்கள் ராசிக்கு கேதுவின் அஸ்த நட்சத்திர இரண்டாம் பாத பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்....

மேஷ ராசி:

அன்பான மேஷ ராசி வாசகர்களே கேது உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். நோய்களை குறிக்கக்கூடிய ஆறாம் பாவகத்தில் கேது இருப்பதால்  நிச்சயமாக உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.   ஒருவேளை உங்களுக்கு ஒரு சிறிய  தொற்று போல ஏற்பட்டு அதை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் நிச்சயமாக அது பெரிய அளவுக்கு உங்களை பாதிக்க வாய்ப்புண்டு. கவனமுடன் இருக்க வேண்டும்.  தெரிந்த இடத்தில் கடன் வாங்குங்கள் கொடுக்கின்ற அளவிற்கு கடன் பெற்றுக் கொடுங்கள்.

ரிஷப ராசி:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு கேது ஐந்தாம் வீட்டில் இருக்கிறார்.  தாய் வழி உறவினர்களோடு சற்று மனக்கசப்பு ஏற்படலாம்.  அவர்களிடத்தில்  நீங்கள் எவ்வளவு அதிகமாக பேச முயற்சிக்கிறீர்களோ  அவ்வளவு அதிகமாக அவர்கள் உங்களை ஒதுக்க நேரிடலாம்.  ஆனால் இது எல்லாருக்கும் நடக்கும் என்று கிடையாது.  ஒரு சில ஜாதகங்களுக்கு  இது போன்ற நடக்க வாய்ப்பு உண்டு.  அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது பயணிக்கும் போது நவாம்ச கட்டத்தில் அவர் ரிஷபத்தில் வந்து தான் நிற்பார். எனவே கிட்டத்தட்ட அவர் உங்கள் பூர்விகத்தை  சற்று கதிகலங்க செய்வார் என்றே கூட கூறலாம்.  சிலருக்கு பூர்வீக சொத்தில் வில்லங்கங்கள் ஏற்பட்டு அவை  வழக்கில் கூட முடியலாம்  இருந்தாலும்  வெளிநாடு செல்பவர்களுக்கு  இது ஏற்றமான   கிரக சூழ்நிலைதான்.

மிதுன ராசி:

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் கேது அமர்ந்திருக்கிறார்.  கேதுவை பொருத்தவரை  நீங்கள் இருக்கும் வீட்டில் சற்று தொந்தரவுகளை கொடுத்து  வாடகை வீடா இருந்தால் வேறு வீட்டிற்கு மாற  உங்களை நிர்பந்திக்கலாம்.  வாகனத்திலும் அதே போல தான்  எங்கள் ஒரு வாகனத்தை வைத்திருந்தால் அதை விற்று வேறு வாகனம் வாங்க  உங்களை முயற்சிக்க வைப்பார்.   அப்படி இல்லை என்றால் ஏற்கனவே இருந்த வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனத்தையும் நீங்கள் வாங்கலாம். ஆனால் அப்படி வாங்க வேண்டும் என்றால் சற்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  வெளியில் வாங்கி உண்ணும் தின்பண்டங்களுக்கு  அவ்வளவாக முக்கியத்துவம் தர வேண்டாம். அது வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

கடக ராசி:

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் கேது  முயற்சிகள் எவ்வளவு செய்தாலும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை என்று சிலர்  எண்ணலாம்.  ஆனால்  தொழில் ரீதியாக வளர்ச்சி நிச்சயமாக உங்களுக்கு இருக்கும். மற்றவர்கள் உங்களை  பார்த்து ஏன் இன்னும் அந்த காரியத்தை முடிக்கவில்லை என்று கேட்கத் தோன்றும்.  கேது ஒரு காரியத்தை நிதானமாகத்தான் செய்ய வைப்பார்.  ஆனால் அந்த வேலையில் இருக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் உங்களுக்கு நன்றாக தெரிந்தாலும் கூட நீங்கள் பொறுமையாக செய்து பெருமையை தேடிக் கொள்வீர்கள்.  கேதுவின் இரண்டாம் பாத சஞ்சாரம்  பொறுமையாக சாதனைகளை புரிய வழிவகுக்கும்.

சிம்ம ராசி:

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டில் கேது குடும்பத்தை விட்டு சற்று உங்களை  தனித்து இருக்க செய்வார்.   காரணம் என்ன  வேலை நிமித்தமாக எப்போதும் பரபரப்பாக நீங்கள் ஒரு வேலை இயங்கிக் கொண்டிருக்கலாம்  அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு தொலைவில் நீங்கள் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.  இப்படியான நிலைமையில் இரண்டாம் வீட்டுக்கு ஏதோ நிச்சயமாக குடும்பத்திலிருந்து உங்களை சற்று தள்ளி வைக்க வாய்ப்பு உண்டு.  அதிகப்படியான முயற்சி செய்கிறேன் ஆனால் பணம் ஏதும் என்னால் ஈட்ட முடியவில்லை என்ற கவலையை கொடுக்கலாம்.
 
தோள்பட்டை தொண்டை கழுத்து போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம்.  அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது பயணிக்கும் போது  சற்று கண் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம்.  பெரிய அளவுக்கு ஒன்றும் பாதிப்பிறாது.  குருவின் பார்வை உங்களுடைய இரண்டாம் வீட்டில் பதிவாவதால் குடும்பத்தோடும் மகிழ்ச்சிகரமாக நேரத்தை செலவிடுவீர்கள். அதே சமயத்தில் சற்று ஏதேனும் காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

கன்னி ராசி:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே  ராசியிலேயே கேது அமர்ந்திருக்கிறார்.  மற்றவர்களை விட்டு தொலைவில் செல்லக்கூடிய காலகட்டம்  உங்களை மற்றவர்கள் பார்க்க விரும்புவார்கள். ஆனால் நீங்கள் தனிமையை விரும்புவீர்கள்  எல்லோரிடமும்  சகஜமாக பழகிய உங்களுக்கு சில காலம்  ஏதோ வேலை நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ நண்பர்களிடத்திலிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும்  சில சமயங்களில் வேலைக்காக வாழ்க்கைத் துணை இடமிருந்தும் கூட பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.   ஆன்மீகத்தில் மனம் சென்று கொண்டே இருக்கும்  ஒரு கட்டத்தில் அதிகப்படியாக கோவிலுக்கு செல்வதும் பூஜை அறையில் நேரத்தை செலவிடுவதுமாக இருப்பீர்கள். யாரோ உங்களை  ஏதோ ஒரு காரணத்திற்காக அழுத்துவது போல தோன்றலாம்.  ஆனால் அது மாயை  நீங்கள் தெய்வத்தை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள் பிரச்சனைகள் விழும்.

துலாம் ராசி:

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் கேது இருக்கிறார். 12 என்பது என்ன  அயன சயன சுகஸ்தா  நிம்மதியாக படுத்து உறங்குவது  சில காலமாக துலாம் ராசி அன்பர்களுக்கு உறக்கம் என்பது சற்று கடினமாக தான் இருக்கிறது.  நன்றாக படுத்து உறங்கலாம் என்று செல்லும் சமயத்தில் ஏதோ ஒரு காரணங்களுக்காக நீங்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் இருக்க முடியாது நிம்மதியாக முன்பு போல உறங்க முடியாது ஆனாலும் ஆதாயம் உண்டு அப்படி இருந்தால் தான் வாழ்க்கை மேம்படும்.

விருச்சக ராசி:

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  கேது 11-ல் இருக்கிறார். லாப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவால் எப்பொழுதும் நன்மையே  குறிப்பாக  தெய்வங்களின் அனுக்கிரகம் உங்களுக்கு  நண்பர் உங்களிடத்தில் வந்து நான் திருப்பதி சென்று விட்டு வந்திருக்கிறேன்  பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்தில் கொடுக்கலாம் .கோவில்களில் கொடுக்கக்கூடிய  பிரசாதங்களாகட்டும்  குங்குமம் மஞ்சள் போன்றவை உங்கள் இல்லம் தேடி வரும். உங்கள் கைகளுக்கே வரும்  அப்படியாக இறைவனின்  அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்  நீங்கள் செய்கின்ற வேலைகளில் தடை   ஏதும் இராது.

தனுசு ராசி:

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே பலகட்ட கஷ்டங்களை கடந்து வந்த உங்களுக்கு பத்தாம் இடத்துக்கு எது பெரிய அளவுக்கு உங்களுக்கு கஷ்டங்கள் கொடுக்கப் போவதில்லை.  அதில் கேது வேலை மாற்றத்தை உண்டாக்குவார் அல்லது  நீங்கள் செய்கின்ற வேலையை விட கூடுதலான வேலைகளை செய்ய வைப்பார். ஆனால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.  ஆனால் வேலையில் மெத்தனமாக இருக்க வேண்டாம்  கொடுக்கின்ற  வேலையை  சிறப்பாக செய்து முடியுங்கள்.
 
சிலர் ஒரு வேலைக்கு மூன்று வேலை பார்க்க நேரிடலாம். அதன் மூலம் பணவரவும் தாராளமாக இருக்கலாம். அலுவலகத்திலும் வேலை பார்க்கலாம் வீட்டிலும் வேலை பார்க்கக் கூடிய சூழலை உருவாகும் இப்படியான காலகட்டத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.   வேலையை தவிர்த்து  வீடு கட்டுதல் புதிய கார் வாங்குதல் நிலம் தொடர்பான எண்ணங்கள் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்  அவையும் உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும் காரணம் பத்தாம் இடத்தை ரிஷப ராசியில் இருந்து குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். கேதுவின் அஸ்த நட்சத்திர இரண்டாம் பாத சஞ்சாரம் உங்களுக்கு நன்மையே செய்யப்போகிறது கவலை வேண்டாம்.

மகர ராசி:

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் கேது  தந்தை யார் ஸ்தானம்  தந்தையாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  ஆனால் பெரிய அளவுக்கு சண்டை வராது.  அப்படியே வந்தாலும் அதை பெரிதாக்க வேண்டாம். உங்களிடமிருந்து தந்தை யாரும் தந்தையார் வழி உறவினர்களும் சற்று விலகி இருக்க நினைப்பார்கள்.  அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.  எல்லாம் நன்மையாக முடியும்.   தெய்வங்களின் அனுக்கிரகம் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.  வாழ்க்கையில் எவ்வளவு அனுபவங்களை நீங்கள் பெற வேண்டுமோ அவ்வளவு அனுபவங்களையும் ஒன்பதாம் இடத்தில் கேது இருக்கும்போது பெற்றுவிடுவீர்கள்.   உண்மையாளர்கள் யார் பொய்யானவர்கள் யார் என்பது  ஒன்பதில் இருக்கும் கேது பகவான் உங்களுக்கு காட்டி கொடுப்பார்  உங்களை நினைப்பவர் யார் உங்களை அழிக்க நினைப்பவர் யார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் மாபெரும் வெற்றிகளை பெற போகிறீர்கள் ஒன்பதாமிடத்தில் உங்களுக்கு நன்மையே செய்வார்.

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  எட்டாம் வீட்டில் கேது  மிகவும் தூரமான இடத்தில் தான் இருக்கிறார்.  எதிரிகளைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம்.  அவர்கள் இல்லாமலே போய்விடுவார்கள்.   வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருங்கள்.  கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படலாம்.   குடும்பத்தாருடன் சிறு சிறு சண்டை ஏற்பட்டாலும் அவை பெரிய அளவிற்கு உங்களை பாதிக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்  நீங்கள் அனுசரித்து செல்லுங்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.   நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதற்கு தாமதம் ஆகலாம்.  கவலை வேண்டாம் கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு எல்லாம் நன்மையாக முடியும் வாழ்த்துக்கள்

மீன ராசி:

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் கேது இருக்கிறார்.  மற்றவர்களை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கும்.  ஒரு நாள் நன்றாக பேசும் நபர் அடுத்த நாள் உங்களை  குறைத்து மதிப்பிட வாய்ப்புண்டு என்று நீங்கள் நினைக்கலாம்.  நேற்று வரை நன்றாக பேசியிருந்தவர்கள் கூட  மறுநாளில் இருந்து உங்களிடம் சரியாக பேசாமல் கூட போகலாம்.   வாழ்க்கைத் துணை இடம் கோபத்தை காட்ட வேண்டாம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.   நீங்கள் படு வேகமான நபராக இருப்பீர்கள் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டும்.
 
உங்களிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள்  ஆனால் அதற்கு சற்று நேரம் பிடிக்கலாம் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள்.   ஏழாம் இடத்தில் அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பயணிக்கும் கேது  ரிஷப  நாவாம்சத்தில் பயணிப்பதால் நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் வெற்றி உண்டு.   யார் என்ன உங்களிடத்தில் பேசினாலும் காது கொடுத்து கேளுங்கள்  பெரிதாக அவர்களுடைய வாழ்க்கையில்  நீங்கள் தலையிட வேண்டாம்  காரணம் நீங்கள் ஏதோ புத்திமதி சொல்ல போய் அவர்கள் அதை தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு  கேது அப்படியும் உருவாக்குவார்  விநாயகரை வணங்கி வாருங்கள் வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget