மேலும் அறிய

Guru Poornima 2022 : இன்று குரு பூர்ணிமா.. எதையெல்லாம் செய்து வழிபடுவது சிறப்பு?

குரு பூர்ணிமா தினத்தன்று அன்று ஏழை எளியோருக்கு பருப்பு தானம் செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து மீண்டு வரலாம் என நம்பப்படுகிறது

நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் இந்த நால்வரை என்றுமே மறக்கக்கூடாது. அவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம். நம்மை பெற்றவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் நம்மை நல்வழியில் நடத்தி நலமும் வளமும் பெற வழிகாட்டியை இருக்கும் குருமார்கள். அப்பேற்பட்ட தெய்வத்திற்கு நிகரான குருக்களின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதம் பௌர்ணமி திதி அன்று கொண்டாடப்படும் தினம் தான் குரு பூர்ணிமா. இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி, புதன்கிழமை இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் தன்நலமற்ற தேவதைகளான ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவது அவசியம். 

ஆதி கடவுள் மகா விஷ்ணுவின் அம்சமானவர்  மகரிஷி வேத வியாஸ். அவர் மகா விஷ்ணுவிடம் இருந்து  வேதங்களை பெற்று அதனை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாக பிரித்தார். அவற்றை எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் 18 புராணங்களாக தொகுத்து வழங்கினார். அந்த மகா குருவின் பிறந்த நாளான ஆடி மாதம் பௌர்ணமி திதி நாள் தான் குரு பூர்ணிமா தினமாக கொண்டப்படுகிறது. 

பண நெருக்கடிக்கு தீர்வு :

குரு பூர்ணிமா தினத்தன்று அன்று ஏழை எளியோருக்கு பருப்பு தானம் செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து மீண்டு வரலாம். மஞ்சள் நிறத்திலான இனிப்பு வகைகளை தானம் செய்வதன் மூலம் குரு பலம் பெறுவார். அதனால் உங்களுடைய பொருளாதார நிலையை மேலும் மேம்படும் என நம்பப்படுகிறது

வாழ்வில் வெற்றி பெற :

ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயிலுக்கு சென்று துருவிய தேங்காய் கொடுத்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெரும். இந்த புனிதமான நாளில் விஷ்ணு பகவானையும் வழிபடுதல் மிகவும் சிறப்பு. குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது

திருமண தடை விலக:

குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் மஜால் உடைகள் தானம் செய்து வழிபாடு செய்வதன் மூலம்  ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும். திருமண தடைகள் விலக இந்த நன்னாளில் குரு யந்திரத்தை வைத்து முறையாக வழிபடுங்கள். இந்த பிராத்தனையை செய்வதன் மூலம் கூடிய விரைவில் நல்ல பொருத்தமான வரன் அமைந்து திருமண நிச்சயமாகும் என நம்பப்படுகிறது.

தென் இந்தியாவை விடவும் வட இந்திய பகுதிகளில் குரு பூர்ணிமா அனுசரிக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget