Madurai: உடல் முழுக்க கீறல்கள்... மதுரை அருகே கத்தியும் ரத்தமுமாய் நடந்த வினோத வழிபாடு!
‛‛துடியான தெய்வமாக இருப்பதால் பொதுமக்கள் பயபக்தியோடு இருந்து திருவிழாவை கொண்டு செலுத்துகிறோம்..’’ -கிராம மக்கள்
உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு ரத்தபழி கொடுத்து பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென் மாவட்டங்களில் சிறுதெய்வங்கள் வழிபாடு மிக முக்கியாமான ஒன்று. தங்களது குல தெய்வ வழிபாடை பயபக்தியாக கடைபிடிப்பார்கள். இதில் சில முக்கிய விழாக்களில் நூதன முறையில் தங்களது பாரம்பரிய பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்க சௌண்டம்மான் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
#madurai | #உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவில் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு ரத்தபழி கொடுத்து பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தியது. ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.........
— Arunchinna (@iamarunchinna) May 24, 2022
Further reports to follow - @abpnadu | @SRajaJourno @UpdatesMadurai . pic.twitter.com/VrdhYWMz7T