Love Horoscope Today :உங்க லவ்வுல என்ன மேஜிக் நடக்கபோகுதுன்னு தெரியணுமா? படிங்க லவ் ராசிபலன்!
Love Horoscope Today in Tamil, September 12th 2022: கொஞ்சம் பொறுமை இழந்து தவிக்கும் காதலர்களுக்காக உதவ தான் இந்த லவ் ராசிபலன். ஜாலியா படுச்சு ஹேப்பியா இருங்க.
ஒன் சைடு லவ்வுல இருக்க சுவாரஸ்யம் டபுள் சைடு லவ்வுல இல்லைனு நம்மில் பலபேர் சொல்லி நீங்க கேட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கு. நீங்களும் கூட இப்படி சொல்லி இருக்கலாம். அதுக்கு காரணம் என்றைக்காவது, நீங்கள் யோசித்ததுண்டா? தேடித்தேடி உருகி உருகி காத்திருந்து காதலித்த நீங்கள் தான், சொல்கிறீர்கள் டபுள் சைடு காதல் கொஞ்சம் கசக்கிறது என்றெல்லாம். ஒன் சைடு லவ்வோ டபுள் சைடு லவ்வோ காதலை பொறுத்தவரை பொறுமை மிகவும் முக்கியம். ஒருதலைக் காதலாக இருக்கும் போது காத்திருக்க, நமக்கு சாதகமில்லாத பதிலை எதிர்கொள்ள, அழுத்தமான நிராகரிப்புக்கு பின்னரும் கூட காதலில் இருந்த பிடிப்பும் நம்பிக்கையும் பொறுமையும் இருதலைக் காதலில் இல்லாமல் போனது எங்கே? அதனை இருவருமாக சேர்ந்து எங்கே தொலைத்தீர்கள் என கொஞ்சமாவது யோசித்து அதனை மீண்டும் அடைய முற்பட்டதுண்டா? அதைச் செய்ய எது தடுக்கிறது?
இந்த கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டிருந்தால் உங்களுக்கு கிடைக்கும் பதில் உங்களின் ஈகோ, முன் முடிவு என்ற வரிசையில் பொறுமையின்மையும் இருக்கும். பொறுமையோடு இருந்த காத்திருப்பு காதலின் எல்லா கட்டத்திலும் இருக்க வேண்டும். பொறுமையின்மையால் காதலை இழந்த பலரை நம்மால் மிகவும் எளிதில் அடையாளம் காண முடியும். கொஞ்சம் பொறுமை இழந்து தவிக்கும் காதலர்களுக்காக உதவ தான் இந்த லவ் ராசிபலன். ஜாலியா படுச்சு ஹேப்பியா இருங்க.
மேஷம்
ப்ளஸ் டூல பயாலஜி படுச்சுட்டு, அடுத்து டிகிரில மெக்கானிக்கல் படுச்சுட்டு, அடுத்து என்ன செய்யறதுனு தெரியாம டிஎன்பிஎஸ்சில குரூப் ஃபோர்க்கு படிக்கறவங்கள பாக்கும்போது குழப்பமா இருக்கும்ல அந்த மாதிரி குழப்பமான நாள். குழப்பமான வாரம். இந்த வீக் ஃபுல்லா நடக்கறதுக்கு நீங்க காரணமா உங்க லவ்வர் காரணமானே தெரியாது.
ரிஷபம்
நீ தான் உலகம், நீ தான் எல்லாம்னு உங்க லவ்வர்ட்ட பேசீட்டு இருக்கும் போது, உங்களுக்கு புடிச்ச படம் எதுனு உங்க ப்ரெண்ட் கால் பண்ணி கேட்டா, காத்துவாக்குல ரெண்டு காதல்னு சொல்லி மாட்டிப்பீங்க. உங்க வாய் தான் எல்லாத்துக்கும் காரணம். ஜாக்கரதையா இருங்க.
மிதுனம்
ஒட்டுமொத்த உலகமே கொரோனால இருந்து மீண்டு வந்துடுச்சு, நம்மல காப்பாத்த யாருமே வரமாட்டாங்களானு நீங்க ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. ஆனா உங்க லவ்வர் தான் உங்கள நெனச்சு ஃபீல் பண்ணனும். எல்லாமே உல்டாவா நடக்கும். பாவமான நாள்.
கடகம்
ப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு, எடுத்த செல்பீக்கு கேப்சன் என்ன போடலாம்னு உங்க ஆளுகிட்ட கேட்டா, கல்யாணம் ஆனவருடன் ஆகாதவர்னு சொல்லி, வீட்டுல கல்யாண பேச்சு ஸ்டார்ட் பண்ண ஐடியா குடுத்து டென்ஷன் பண்ணுவாங்க. உங்க ஆளுகிட்ட மட்டும் ஐடியா கேட்டுடாதீங்க. அப்பறம் ரிஷ்க் உங்களுக்கு தான்.
சிம்மம்
இந்த நாள் உங்களுக்கு, டேமேஜ் ஆன பீசு நானே ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்னு ஸ்டேட்டஸ் போட்டு தெரிக்கவிடுற அளவுக்கு உங்களுக்கு உங்க ஆள்கிட்ட பாராட்டுகள் கிடைக்கும். ஃபீல் குட் டே.
கன்னி
வருஷத்துல எப்ப கூப்டு உங்க லவ்வுல முக்கியமான டோஸ் பத்தி கரெக்ட் டேட்டோட பேசற திறமை இருக்குற உங்களுக்கு, அந்த டே வரும் போது, அந்த டேல நடந்த இன்சிடண்ட மறந்துடுற வித்தியாசமான நபரான உங்களுக்கு இந்த வாரம் ரொம்பவே முக்கியமான வாரம். முக்கியமான நாள் உங்க லவ்வுல.
துலாம்
ஒரு நல்ல லவ் சினிமாவ பாத்துட்டு அதுல வர்ற கேரக்டர் மாதிரியே லவ்வர் கெடச்சிருந்தா பரவலயேனு கமிட் ஆன உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஃபீல் பண்ணீட்டு இருக்கும்போது, அந்த கேரக்டர்ல நடுச்சவங்களே நமக்கு லவ்வரா கெடச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. இந்த எண்ணத்த விடற வரைக்கும் நீங்க சிங்கிள் தான்.
விருச்சிகம்
உங்க ப்ரெண்ட்ஸ், உங்க் ப்ரெண்ட்ஸோட ப்ரெண்ட்ஸ்னு எல்லாருக்கும் நீங்க அட்வைஸ் கொடுத்து லவ்வுல பக்காவா செட் ஆகி இருப்பாங்க. ஆனா நீங்க படு சொதப்பல் செஞ்சுட்டு இருப்பீங்க. உங்களுக்கே தெரியும், எது சரி எது தப்புனு, ஆனாலும் நீங்க சொதப்பல் செஞ்சுட்டு தான் இருப்பீங்க. சொதப்பல் டே.
தனுசு
நீங்களும் உங்க லவ்வரும் மேரேஜ் செய்துக்க போறீங்கனு சொன்னா உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆல் த பெஸ்ட்னு சொல்லீட்டு உங்க நெம்பர ப்ளாக் பண்ற அளவுக்கு உங்க சைடு ரொம்ப வீக். சோ கேர் ஃபுல்லா உங்க ப்ரெண்ட்ஸ கேண்டில் பண்ணுங்க.
மகரம்
உங்க உடன்பிறப்பு அவங்களா வந்தே உங்க லவ்வர பத்தி விசாருச்சுட்டு, நீங்க சொல்றதுக்கு எல்லாம் பாசிடிவ் ரியாக்ஷன் தந்துட்டு, கடைசில ' புரியுது, பட் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாதுனு' சொல்லீட்டு போயிடுவாங்க. நம்பி ஏமாற வாய்ப்புகள் அதிகம்.
கும்பம்
உங்களாலயே நம்ப முடியாது. இன்னைக்கு உங்களுக்கு மெஜாரிட்டியா ஹேப்பி சர்ப்ரைஸஸ் நடக்க வாய்ப்புகள் அதிகம். உங்க லவ்வர் உங்கள லவ்வுல திக்குமுக்காடச் செய்யப்போறாங்க. ஹேப்பியான நாள்.
மீனம்
நீங்க ஒரு குட் ஹார்ட், நல்ல ஹியூமன் பீன், உங்ககிட்ட பேசுனா மனசுக்கு ரிலாக்ஸா இருக்குனு உங்க ப்ரெண்ட்ஸ் உங்க லவ்வர் எல்லாம் சொல்லுவாங்க. ஆனா உங்க லவ்வர் வீட்டுல வேஸ்ட் ஃபெல்லோவா பாப்பாங்க. ஆனா வெளிய சொல்ல மாட்டாங்க. உங்க அண்டர் எஸ்டிமேட் பண்ணுவாங்க. தைரியமா இருக்க வேண்டிய நாள்.