மேலும் அறிய

திருவண்ணாமலை : சித்ரா பெளர்ணமி கிரிவலம்.. இலவச பேருந்து பயணம்.. ஆட்சியர் அறிவிப்பு என்ன?

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தையொட்டி 15-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று நாளை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் நலன் கருதி ஆட்டோவுக்கான தனிநபர் கட்டணம் நிர்ணயம் செய்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரி மைதானம் வரை மற்றும் அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோயில் வரை மற்றும் திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை தனி நபர் ஒருவருக்கு ஆட்டோ கட்டணம் ரூபாய் 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை : சித்ரா பெளர்ணமி கிரிவலம்.. இலவச பேருந்து பயணம்.. ஆட்சியர் அறிவிப்பு என்ன?

வேட்டவலம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் வரையிலும், திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை, மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை, அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை, நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரை, பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை, தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை தனி நபர் ஒருவருக்கு ஆட்டோ கட்டணம் ரூபாய் 30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை : சித்ரா பெளர்ணமி கிரிவலம்.. இலவச பேருந்து பயணம்.. ஆட்சியர் அறிவிப்பு என்ன?

அதேபோன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருதற்காக மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்க முன் வந்துள்ளனர். இதற்காக 50 தனியார் பேருந்துகள் மற்றும் 16 தனியார் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் திருவண்ணாமலை நகரில் உள்ள 950 உள்ளூர் ஆட்டோக்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனிநபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஆட்டோவில் ஒட்டப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-232266 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கிரிவலப் பாதையில் எந்த இடையூறும் இல்லாமல் பக்தர்கள், பொதுமக்கள் சென்றுவர வருவாய்த் துறை, போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget