மேலும் அறிய
Advertisement
மதுரை மீனாட்சியம்மன் கோவில் காலண்டர்: புதிய ஒப்பந்தம் அறிவிப்பு!
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் காலண்டர் அச்சிடும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு பின் வேலைப் பாடுகள் நடைபெற்று வருகிறது. கோவில் தூண்கள் வர தாமதமான நிலையில் தற்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கற்கள் கொண்டுவரப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழா நிகழ்வின் சுவாமி அம்மன் படங்களை தொகுத்து 13 பக்கம் கொண்ட சிறப்பு காலண்டர் அச்சிடப்படுவது வழக்கம். அந்த வகையில் மீனாட்சியம்மன் கோவிலில் 2022-ம் ஆண்டுக்கான உயர்தர காலண்டர் அச்சிடும் பணிக்கு மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருடம் தோறும் ஜனவரி மாதம் பல் வண்ணக் காலண்டர் அச்சிடப்படும் நிலையில், காலண்டரில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரரின் பல்வேறு கோலங்களுடன் பளபளக்கும் உயர் ரக தாளில் படங்கள் அச்சிடப்படும்.
இதனால் மீனாட்சியம்மன் கோவில் வண்ணக் காலண்டருக்கு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் வண்ணக் காலண்டர் பக்தர்களுக்கு ரூ.100 என்ற விலையில் விற்கப்படுவதால் பக்தர்களுக்கு ஆர்வமுடன் வாங்கிச் செல்வர். கோயில் நன்கொடையாளர்கள், கோயிலுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வண்ணக்காலண்டரும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதனால் ஆண்டுக்காண்டு காலண்டர் வாங்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவிலில் 2022-ம் ஆண்டுக்கான வண்ணக் காலண்டர் அச்சிடும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. இதில் பல நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்தப்புள்ளி வழங்கியிருந்தன. ஆனால் ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனங்கள் கோரியிருந்த தொகை மிகவும் அதிகமாக இருந்ததால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாகவும், இந்நிலையில் வண்ணக்காலண்டர் அச்சிடுவதற்கான ஒப்புந்தப்புள்ளி மீண்டும் கோரப்பட்டுள்ளதோடு, இதன்படி நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இதையடுத்து ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் -
திருக்கோவில் சார்பில் அச்சிடப்படும் பல் வண்ணக் காலண்டர் பக்தர்களுக்கு ரூ.100 என்ற அளவில் குறைந்த விலையில் வழங்கப்படும் சூழ்நிலையில், அச்சு நிறுவனங்கள் காலண்டர் அச்சிடுவதற்கான தொகையை அதிகமாக குறிப்பிட்டிருந்தன. இதனால் காலண்டர் விலை கடுமையாக உயரும் நிலை இருந்ததால் காலண்டர் விலையை உயர்த்துவதை தடுக்கும் வகையில் மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion