மேலும் அறிய

April Rasi Palan: கும்ப ராசிக்கு இனி எல்லாம் வெற்றியே! மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கும்? ஏப்ரல் மாத பலன்கள் இதோ..

ஏப்ரல் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான ராசிபலனை பார்க்கலாம்.

 ஏப்ரல் மாத ராசி பலன் :

 மேஷ ராசி:

 உங்களுடைய ராசிக்கு  ஐந்தாம் அதிபதி சூரியன் பன்னிரண்டாம் பாவகமான மீனத்தில் வீற்றிருக்க  ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு  தன்னுடைய உச்ச வீடான  அதாவது உங்களுடைய ராசியான மேஷத்தில்  அமர்கிறார்.  நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் வந்து விட்டது.  புத்திர பாக்கியம் கிடைக்கும்.  நீண்ட தூர  பிரயாணங்களை  மேற்கொள்வீர்கள்.  சூரியன் மூன்று நட்சத்திரங்களில் பிரவேசிக்கிறார் .  கேது உங்களுடைய நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் போது  கடன்கள் அடையும்  நோய்கள் விலகும்.  எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  மொத்தத்தில் 12 ராசிகளை  வைத்துப் பார்க்கும்போது  மேஷ ராசிக்கு அபாரமான பலன்கள் வர இருக்கிறது.

 ரிஷப ராசி:

 முதல் பதினைந்து நாட்கள் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் பிரவேசிப்பதால், தாயாரின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். வீடு வாகனம் போன்றவை உங்களுக்கு லாபகரமாக முடியும்.  ஏப்ரல் பதினைந்தாம் தேதிக்கு பிறகு சூரியன் 12 ஆம் பாவத்தில் உச்சம் அடைவதால்  நீண்ட தூர  பிரயாணங்களை மேற்கொள்வீர்கள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் அது மருத்துவத்தின் மூலம் குணமடைய வாய்ப்புண்டு.  வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும்.  வரயங்கள் மேலோங்கும்.  ஆகையால் பணம் செலவு செய்யும் பொழுது  பார்த்து செய்வது நல்லது.

 மிதுன ராசி:

 மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதி பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.  மாதத்தின் முதல் 15 நாட்களில் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவீர்கள் . குறிப்பாக தொழிலில் கஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசி வாசகர்களே உங்களுக்கான பொற்காலம் இதோ வந்து விட்டது.  சித்திரை மாசம் ஆரம்பிக்கும் போது  சூரியன் மூன்றாம் அதிபதி உங்களுக்கு லாப ஸ்தானத்தில் அமர்கிறார்.  உண்மையாகவே  மிதுன ராசியை பொறுத்த வரை லாப ஸ்தானத்தில் அமரக்கூடிய சூரியன்  உங்கள் ராசிக்கு மிகுந்த நன்மையை கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்.  நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற போகிறது.  வீடு விற்க  உகந்த நேரம்.  பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவதற்கான நேரம்.

 கடக ராசி:

 கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  இரண்டாம் அதிபதி  ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார்.  குடும்பத்துடன்  நீண்ட தூர ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  தன வரவு தாராளமாக இருக்கும்.  வேலையில் தற்போது சுனக்கமிருந்தாலும்  எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.  வேலையில் இருந்து வந்த  தடை தாமதங்கள் விலகும்.  படிக்கின்ற குழந்தைகளுக்கு நல்ல  முன்னேற்றம் ஏற்படும்.  பாடத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்குவார்கள். சேமிப்பு உயரம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.  திருமணமானவர்களுக்கு  குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகி விவாகரத்து வரை சென்றது அல்லவா  தற்போது அந்த நிலை மாறப்போகிறது.  பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றாக சேரும்.  தொழில் ஸ்தானமான பத்தாம் பாவகத்தில்  ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு  சூரியன் பலமடைவதால்  அரசு உத்தியோகத்திற்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்  வேலையில் அமர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

 சிம்ம ராசி :

அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில்  ராகுவும் அமர்ந்திருக்கிறார்கள்.  போதாத குறைக்கு சூரியன் வேறு எட்டாம் பாவத்தில் மறைகிறார்.  எனவே சற்று கடினமான காலகட்டமாக இருந்தாலும்.  ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு  ஒன்பதாம் பாவத்தில் வரக்கூடிய சூரியன் உங்களுக்கு நல்ல வழியை காட்டப் போகிறார்.  தொழிலில் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அதை சமாளித்து மேலே வருவீர்கள்.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  ராசி அதிபதியே உச்சம் பெறுவதால்  பலருக்கும் தெரிந்த நபராக மாறுவீர்கள்.  குறிப்பாக அரசியல் தொடர்பு இருக்கும் சிம்ம ராசி வாசகர்களுக்கு இதுதான் பொற்காலம்.

 கன்னி ராசி:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்கனவே எட்டாம் இடத்தில் குரு பகவான் மறைந்திருக்கிறார். இந்த சமயத்தில் 12 ஆம் அதிபதியான சூரியன் பங்குனி மாதத்தில் அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதி வரை  உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து நீண்ட தூர பிராயணங்கள் வெளிநாடு, வெளி தேசம், வெளி மாநில வேலை போன்றவற்றை சாதகமாக கொடுக்கப் போகிறார். ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு சூரியன் எட்டாம் இடத்தில் மறைகிறார்.  இது நல்லதா? என்றால் ஆம் நல்லது ஏற்கனவே குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து சில சங்கடங்களை கொடுத்தார் அல்லவா? தற்போது சூரியன் அவருடன் சேரும்பொழுது உச்சம் பெற்ற சூரியனாக உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒளி கொடுக்கக்கூடிய சூரியனாக தான் இருப்பார்.  கிட்டத்தட்ட  இருளில் இருக்கக்கூடிய கன்னி ராசி வாசகர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நேரம் தான் இந்த ஏப்ரல் மாதம்.

 துலாம் ராசி:

 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்கனவே குரு பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்து சற்று நல்ல பலன்களையே கொடுத்திருந்தாலும்.  பதினோராம் அதிபதி ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை சூரியன் ஆறாம் வீட்டில் பிரவேசிப்பதால் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  அரசு வழிகளில் உங்களுக்கு ஆதாயம் உண்டு.  ஏற்கனவே உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு  ஒரு இடத்தில் கடன் வாங்கி மற்றொரு இடத்தில் கடன் அடைக்க கூடிய வழிகளை ஏற்படுத்துவார்.  ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு உச்சம் பெற்ற சூரியன் உங்களின் ஏழாம் வீட்டில் அமர்வதால்  நீண்ட நாட்களாக திருமணமே ஆகாமல் இருந்தவர்களுக்கு கூட திருமண பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.  குறிப்பாக முதல் திருமணம்  சரியாக அமையாமல் போனவர்களுக்கு  தற்போது இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் உண்டு.  வங்கி சேமிப்பு உயரும் காலம்.  எதிர்பாராத தன வரவு உண்டு. கூட்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும் நேரம்.

 விருச்சக ராசி:

 அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதி சூரியன் ஐந்தாம் பாவகத்தில் அமர்ந்து சற்று ஆறுதலான பலன்களை கொண்டு வருவார்.  குறிப்பாக ஐந்தாம் வீட்டில் இருக்கும் ராகுவை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை சூரியன் செய்வார்.  ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் பாவகத்தில் அமர்கிறார்.  உச்சமும் பெறுகிறார்.  என்னுடைய நோய்க்கு எத்தனையோ மருந்துகளை முயற்சித்து விட்டேன் என்று  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதோ மருத்துவத்தின் மூலம் நல்ல தீர்வு வரப்போகிறது.  தொழில் ரீதியாக நல்ல  வாய்ப்புகள் உருவாகும்.  ஆறாம் வீட்டில் உச்சம் பெறும் சூரியனால் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றமே. அரசு தேர்வுகள் எழுதி விட்டு உத்தியோகத்திற்காக காத்திருக்கும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கப் போகிறது.  கிட்டத்தட்ட நல்ல பலன்களை இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு நடக்கும்.

 தனுசு ராசி:

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியன் அமர்கிறார்.  கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியே நீங்கள் ஆசைப்பட்ட கனவு வாகனம் கிடைக்கும்.  நான்காம் இடத்தில் ஏற்கனவே ராகு அமர்ந்திருக்கிறார்  உடன் சுக்கிரனும் வந்து சேரப் போகிறார்  இந்த காலகட்டத்தில் ஒன்பதாம் அதிபதி நான்காம் வீட்டில் இருப்பதால் நிச்சயமாக நீங்கள் ஆசைப்பட்ட பிரம்மாண்டமான வீட்டை கட்டுவீர்கள்.  தாயாரின் உடல்நலம் சீராக  அமையும்.  தனுசு ராசிக்கு சித்திரை மாதம் அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு சூரியன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். குழந்தை பாக்கியம் தள்ளி போனவர்களுக்கு இதோ புத்திர பாக்கியம் கிடைக்கப்போகிறது.  உங்களுக்கான நல்ல வேலை கிடைக்கப் போகிறது.  இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு குதூகலமான மாதமே.

 மகர ராசி:

 அன்பார்ந்த வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் அஷ்டமாதிபதி அமர்ந்திருக்கிறார்.  மூன்றாம் இடம் என்பது வெற்றி ஸ்தானம் ஆதலால்  நீங்கள் வெற்றி பெறுவது சற்று தாமதமாகலாம் ஆனால் நிச்சயமாக அதை மேற்கொள்ள தான் போகிறீர்கள்.  ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு சூரியன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.  அப்படி என்றால் மனதிற்கு பிடித்த இனிய வாகனத்தை வாங்கப் போகிறீர்கள்.  குறிப்பாக உள்ளூரில் இல்லாமல் வெளியூரிலிருந்து அந்த வாகனத்தை வீட்டிற்கு எடுத்து வருவீர்கள்.  நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்வீர்கள்.  சித்திரை மாதத்தில் உங்களுக்கு  மனதிற்கினிய நல்ல சம்பவங்கள் நடைபெறும்.  சூரியனின் ஒளி உங்களின் நான்காம் வீட்டில் பதிவாவதால் வீடு வாகனம்  போன்றவற்றால் நீங்கள் பயன் அடைவீர்கள்.

 கும்ப ராசி:

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். ஏழாம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பதால் நிச்சயமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  இதுவரை  நீங்கள் சம்பாதித்த வருமானம் அல்லாமல் கூடுதல் வருமானத்தை பெறுவீர்கள்.  கண் சம்பந்தமான விஷயங்களில் சற்று கவனமாக  இருங்கள்.  கும்ப ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு அமரும் சூரியனால் திருமண பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எந்த காரியத்தை முன்னெடுத்தாலும் அது உங்களுக்கு வெற்றியாக மட்டுமே அமையும்.  அசாத்திய தைரியம் கூடும்.  இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு ஒரு வெற்றியின் மாதமே.

 மீன ராசி:

 அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசியிலேயே ஆறாம் அதிபதி வந்து அமர்கிறார்.  முறையான மருத்துவத்தின் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் விலகும்.  அடுத்தவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கும் அளவிற்கு உங்களின் வாழ்க்கைத் தரம் உயர போகிறது.  யாரிடம் எதைப் பேச வேண்டும் என்பதில் சற்று கவனமாக இருங்கள்.  ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு இரண்டாம் இடத்தில் சூரியன் உச்சம் பெறுவதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  தன வரவு தாராளமாக இருக்கும்.  நீண்ட தூர பிரயாணத்தை மேற்கொள்வீர்கள்.  உங்களை சுற்றி இருந்த எதிரிகள் அழிவார்கள்.  இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு பொன்னான மாதமாகவே தான் அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget