Aavani Month Rasipalan:சிம்ம ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா?
Aavani Month Rasipalan: அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
சிம்ம ராசி - ஆவணி மாத ராசி பலன்:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம். ராசி அதிபதி சூரியன் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது உங்களின் வேலை அது மட்டுமல்ல அடுத்தவர்களுக்கு ஒளி கொடுத்து இருட்டில் இருப்பவர்களை கை தூக்கி விடுவதும் நீங்கள் தான். குறிப்பாக சிலருக்கு அடுத்தது வாழ்க்கையில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையின் பாடங்களை வைத்து மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நீங்கள் ஒரு ஜாம்பவான். சரி ஆவணி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மாதம் கிருஷ்ணர் கூறுவது போல பிடித்த மாதம் மார்கழி என்பார்கள் அல்லவா உங்களுக்கு பிடித்த மாதம் ஆவணி என்று நான் கூறுகிறேன், தங்கு தடையின்றி நினைத்த காரியங்கள் அப்படியே நடைபெற சிம்ம ராசிக்கு ஆவணி மாதம் உகந்தது.
சக்தி படைத்தவராக மாறப் போகிறீர்கள்:
உங்கள் ராசி அதிபதி ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். 100 கிலோமீட்டர் தள்ளி தொலைவில் இருந்தாலும் உங்களின் புகழ் அங்கே வரவும் அதிகார பதவியில் இருப்பவர்கள் கூட உங்களைக் கண்டு நடுங்குவார்கள். காரிய சித்தி உண்டாகும் பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி இருப்பார்கள். கிட்டத்தட்ட குரு நான்கு மாத காலமாக உங்களுக்கு பத்தாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே நீங்கள் இருந்தது போல தற்போது இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களுடைய பலம் உங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்பது போல உங்களைப் போன்று ஒரு மிகப்பெரிய பலசாலியை வேலையில் இருந்து அவ்வளவு சுலபமாக அகற்றி விட முடியாது. காரணம் நீங்கள் செய்கின்ற வேலையை போன்று மற்றவர்கள் தான் செய்ய முடியாது. எடுத்ததை வெற்றியோடு செய்து முடிப்பவர் நீங்கள் சூரியன் ஒரு பெரிய நட்சத்திரம் கிரகங்களையே சுற்றிவர வைக்க கூடிய சக்தி உடையது அப்படிப்பட்டவர் ஆவணி மாதத்தில் மற்றவர்கள் உங்களை நோக்கி வருமாதற்கு சக்தி படைத்தவர் ஆகத்தான் மாறப் போகிறீர்கள்.
புதிய வேலை அமையப்போகிறது:
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சூரியன் கேது நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது வாக்கு வன்மை ஏற்படும் எதிரிகள் நடுங்கும் அளவிற்கு உங்களுடைய தோரணை மாறும். முக்கியமான விழாக்களில் முன்னின்று நீங்களே தலைமையேற்று செயல்படுவீர்கள். ஆழமான ஆராய்ச்சி மனப்பான்மை உடைய நீங்கள் புதிய புதிய காரியங்களை செயல்படுத்தியதன் மூலம் வெற்றியும் காண்பீர். மற்ற காரியங்களைப் பற்றி நமக்கென்ன என்று இருக்கும் தற்போதைய சூழலில் மற்றவர்களை பற்றியும் யோசிக்கும் நபர் தான் நீங்கள். தன வருவாய் பற்றாக்குறை அதிகமாக காணப்படும். காரணம் இரண்டில் கேது இருப்பதால் சம்பாதிப்பது குறித்து அதிகப்படியான சிந்தனை இருக்கும் கவலை வேண்டாம். வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா தற்போது ஆவணி மாதத்தில் செல்லுங்கள் உடனடியாக வேலை கிடைக்கும் இந்த வேலை பல ஆண்டுகளுக்கு அப்படியே நீடித்தும் இருக்கும்.
சூரியன் பத்தாம் அதிபதி சுக்கிரன் சாரத்தில் அதாவது பூர நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது ஏற்கனவே சொன்னது போல இருக்கின்ற வேலை பிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் தற்போது புதிய வேலை அமையப்போகிறது பூரம் நட்சத்திரத்தில் சூரியன் பயணம் செய்யும்போது வேலையில் தலைமையேற்று செயல்படுவீர்கள் புதிய வேலை அமையும் பிரதிகாரிகளில் பாராட்டை பெறுவீர்கள் நல்ல காரியங்கள் நடைபெறும் பிள்ளைகள் விழி ஆதாயம் என்று உற்றார் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கி மகிழுங்கள் இப்படியாக அருமையான பல நல்ல காரியங்கள் உங்களுக்கு நடைபெறப்போகிறது காத்திருங்கள் வாழ்த்துக்கள்.