மேலும் அறிய

Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?

அஸ்வினி முதல் ரேவதி வரையில் 27 நட்சத்திரக்காரர்களும் அவர்கள் வீடு கட்ட வேண்டிய திசையையும் கீழே விரிவாக காணலாம்.

ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில்  27 நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒருவித பலன்களும், யோகங்களும் உண்டு. 

வீடு கட்ட வேண்டியது என்பது அனைவரின் லட்சியமாக இருக்கும். வாஸ்து பார்த்து ஒவ்வொருவரும் வீடு கட்டுவது வழக்கம் ஆகும். அந்த வகையில், 27 நட்சத்திக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது? அந்த வீட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டிய நிறங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. அஸ்வினி:

 அஸ்வினி நட்சத்திரத்திற்கு கட்டிடத்தின் அகலம் தெற்கு வடக்காகவும், நீளம் கிழக்கு மேற்காகவும் இருக்க வேண்டும். வீடு கிழக்குப் பார்த்தாக இருப்பது சிறப்பாகும்.  இந்த வீட்டில் சிவப்பு, பழுப்பு வெண்மை கலந்த நிறம், இளம்பச்சை ஆகிய வண்ணங்கள் இடம்பெற்றால் கூடுதல் சிறப்பாகும்.

2. பரணி:

பரணி நட்சத்திரக்காரர்கள் தெற்கு பார்த்த வீடாக கட்டுவது சிறப்பாகும். இந்த வீட்டில் வெள்ளை, பழுப்பு வெண்மை, சிவப்பு, அடர்சிவப்பு நிறங்கள் இடம்பெற்றால் கூடுதல் சிறப்பாகும்.

3. கார்த்திகை:

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் வீடு தெற்கு முகம் பார்த்ததாக இருக்க வேண்டும். தலைவாசல் வடக்கு முகம் பார்த்ததாக இருப்பதை கட்டாயம் கூடாது. இந்த வீட்டில் இளமஞ்சள், இளஞ்சிவப்பு நிறம் இடம்பெற்றால் மேலும் சிறப்பாக அமையும். 

4. ரோகிணி:

இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீட்டை தெற்கு அல்லது மேற்கு முகம் நோக்கி கட்டினால் சிறப்பாக இருக்கும். இந்த வீட்டில் சிவப்பு, இளம்பச்சை, பொன்னிறம், மங்கலான வெண்மை நிறங்கள் இடம்பிடித்தால் நன்றாக இருக்கும். 

5. மிருகசீரிஷம்:

இந்த நட்சத்திரக்காரர்களின் மனை மேற்கு நோக்கி இருப்பது சிறப்பாகும். வடக்கு தெற்கு நோக்கி அகலமும், கிழக்கு மேற்காக நீளமும் இருப்பது சிறப்பாகும். இந்த வீட்டில் வெள்ளை, இளம்பச்சை, இளம்சிவப்பு நிறங்கள் இடம்பெற்றால் கூடுதல் சிறப்பாகும். 

6. திருவாதிரை:

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வடக்கு மேற்கு மனை கட்டிடம் இருப்பது நல்லது ஆகும். இந்த வீட்டில் இளம் மஞ்சள், இளம் சிவப்பு நிறம் இடம்பெறுவது சிறப்பாகும். 

7. புனர்பூசம்:

புனர்பூச நட்சத்திரக்காரர்கள் தங்களது வீடு வடக்கு பார்த்தது போல இருப்பது சிறப்பாகும். இந்த வீட்டில் இளம்பச்சை, இளம் சிவப்பு, மங்கலான வெண்மை நிறங்கள் இடம்பிடிப்பது சிறப்பாகும். 

8. பூசம்:

பூச நட்சத்திரக்காரர்கள் தங்களது வீட்டை வடக்கு பார்த்து கட்டுவது சிறப்பாகும். இந்த வீட்டில் இளம்பச்சை, இளம் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இடம்பெறுவது சிறப்பாகும். 

9. ஆயில்யம்:

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தங்களது வீ்ட்டை கிழக்கு முகம் பார்த்து கட்டுவது சிறப்பாகும். இந்த வீட்டில் இளம் மஞ்சள், இளம் சிவப்பு, வெண்மை நிறங்கள் இடம்பிடிப்பது சிறப்பாகும். 

10. மகம்:

மகம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீட்டை தெற்கு அல்லது மேற்கு வாசல் நோக்கி கட்டுவது சிறப்பாகும். இந்த வீட்டில் சிவப்பு, வெண்மை, இளஞ்சிவப்பு வண்ணங்கள் இருப்பது சிறப்பாகும். 

11. பூரம்:

இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை தெற்கு பார்த்து அல்லது தெற்கு தலைவாசல் வைத்து  கட்டினால் மங்கலம் உண்டாகும். இந்த வீட்டில் மங்கலான வெண்மை, பொன்னிறம் இடம்பெற்றால் சிறப்பாகும். 

12. உத்திரம்:

இந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை தெற்குப்பார்த்த திசையில் கட்டுவது நல்லது ஆகும். மேற்கு மனைவாசலாக இருந்தாலும் சிறப்பாகும். இந்த வீட்டில் இளம் மஞ்சள், இளம் சிவப்பு, பழுப்பு நிறம் இடம்பெற்றால் சிறப்பாகும். 

13. அஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கு பார்த்த முகத்தில் வீடு கட்டுவது சிறப்பாகும். சிவப்பு, வெண்மை, இளம்பச்சை, மங்கலான சிவப்பு நிறம் இந்த வீட்டில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். 

14. சித்திரை:

சித்திரையில் பிறந்தவர்கள் வடக்கு அல்லது மேற்கு முகம் பார்த்து வீடு கட்டுவது சிறப்பாகும். தலைவாசல் வடக்கு அல்லது மேற்கு பார்த்து இருந்தாலும் சிறப்பாகும். இந்த வீட்டில் கருநீலம், பொன்னிறம் இடம்பெறுவது சிறப்பாகும். 

15. சுவாதி:

சுவாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை வடக்குப் பார்த்து கட்டுவது சிறப்பாகும். இவர்கள் தங்கள் வீடுகளில்  மஞ்சள், இளம்சிவப்பு, பழுப்பு, தூய வெண்மை நிறங்கள் இருந்தால் சிறப்பாகும். 

16. விசாகம்:

விசாக நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை வடக்கு அல்லது கிழக்கு பார்த்து கட்டினால் சிறப்பாகும். இந்த வீட்டில் சிவப்பு, வெள்ளை, பச்சை, வெளிர்சிவப்பு நிறங்கள் இடம்பிடித்தால் சிறப்பாகும். 

17. அனுஷம்:

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் கிழக்குப் பார்த்த முகத்தில் வீடு கட்டுவது சிறப்பாகும். மங்கலான வெண்மை, கரூநீலம், பொன்நிறம் ஆகிய வண்ணங்கள் இருந்தால் சிறப்பாகும். 

18. கேட்டை:

கேட்டை நட்சத்திரக்காரர்கள் தெற்கு அல்லது கிழக்கு முகம் பார்த்து வீடு அமைப்பது சிறப்பாகும். கிழக்கு அல்லது தெற்கு பார்த்து கட்டிடம் அமைப்பதும் சிறப்பாகும்.  மஞ்சள், பழுப்பு ஆகிய வண்ணங்களில் கட்டிடங்கள் இருப்பது சிறப்பாகும். 

19. மூலம்:

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வீடுகளை தெற்கு முகம் பார்த்து கட்டுவது சிறப்பாகும். சிவப்பு நிறம், வெள்ளை, இளம்பச்சை, இளஞ்சிவப்பு நிறங்களில் வீடுகள் கட்டுவது சிறப்பாகும். 

20. பூராடம்:

பூராடம் நட்சத்திரக்காரர்கள் தெற்கு அல்லது மேற்கு முகம் பார்த்து கட்டுவது சிறப்பாகும். கரூநீலம், பொன்னிறம் ஆகிய வண்ணங்கள் இந்த வீட்டில் இருப்பது கூடுதல் சிறப்பாகும். 

21. உத்திராடம்:

உத்திராட நட்சத்திரக்காரர்கள்   மேற்கு முகம் நோக்கி தங்கள் வீடுகளை கட்டுவது சிறப்பாகும். இந்த வீட்டில் மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணங்கள் இடம்பெறுவது சிறப்பாகும்.

22. திருவோணம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வடக்கு அல்லது மேற்கு பார்த்து தங்கள் வீடுகளை கட்டுவது சிறப்பாகும். சிவப்பு, வெண்மை, இளம்பச்சை, இளஞ்சிவப்பு வண்ணங்களில் இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

23. அவிட்டம்:

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் வடக்குப் பார்த்த வீடு கட்டுவது சிறப்பாகும். இவர்களுக்கு வடக்குப் பார்த்த வாசல் யோகம் தரும். கருநீலம், பொன்னிறம் இந்த வீடுகளில் இடம்பெறுவது சிறப்பாகும். 

24. சதயம்:

சதய நட்சத்திரக்காரர்கள் வடக்கு அல்லது கிழக்கு பார்த்த முகமாக வீடு கட்டுவது சிறப்பாகும். இளம் மஞ்சள், இளஞ்சிவப்பு, வெண்மை நிறங்கள் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாகும். 

25. பூரட்டாதி:

இவர்கள் தங்கள் வீடுகளை கிழக்கு முகம் பாரத்து கட்டுவது சிறப்பாகும். சிவப்பு, வெள்ளை, வெளிர் சிவப்பு இந்த வீடுகளில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். 

26. உத்திரட்டாதி:

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை தெற்கு அல்லது கிழக்கு முகமாக பார்த்து கட்டுவது சிறப்பாகும். தலைவாசலும் இதே திசையில் இருப்பது சிறப்பாகும். கருநீலம், பொன்னிறத்தில் நிறங்கள் இடம்பெறுவது சிறப்பாகும். 

27. ரேவதி:

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வீடுகளை தெற்கு முகமாக கட்டுவது சிறப்பாகும். இளம் மஞ்சள், சிவப்பு, பழுப்பு வண்ணங்கள் இந்த வீடுகளில் இடம்பெறுவது சிறப்பாகும். 

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (30-07-2026): கடகத்துக்கு பாராட்டு.. தனுசுக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (30-07-2026): கடகத்துக்கு பாராட்டு.. தனுசுக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (28-07-2026): கன்னிக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (28-07-2026): கன்னிக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27-07-2026): திங்கட்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (27-07-2026): திங்கட்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget