இன்றைய ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் (24-04-2021)
இன்றைய நாளில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் என்பதை ஜோதிட நிபுணர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கணித்துள்ளார்.
24.04.2021
சனிக்கிழமை
நல்ல நேரம்
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம்
மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை
இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை
ராகு காலம்
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மேஷம் :
நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சுபச்செலவுகள் அமையும். வரன்கள் வரமாக அமையும். தொலைதூர தகவல்கள் சிறப்பாக அமையும். பிரிந்தவர்கள் பிரியத்துடன் ஒன்று சேர்வார்கள். அன்புக்குரியவர்கள் சந்திப்பு நிகழும். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாக அமையும். காதல் வாய்ப்புகள் சுமாராகதான் இருக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் :
பரிசு, பாராட்டு பெறலாம். புதிய காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். உங்கள் மனோதிடம் அனைவரையும் பாராட்ட வைக்கும். தகவல்கள் தனவரவு கூட்டும். தொலைதூரப் பயணங்களால் சிலருக்கு நன்மைகள் ஏற்படலாம். இருப்பினும் பயணங்களை குறைப்பது நல்லது. வெளியூர் தகவல்கள் சாத்தியமாகும். விருப்பங்கள் நிறைவேறும். விருந்து, விழாக்களை குறைத்துக்கொள்வது நல்லது. ஆன்மீகப்பணிகள் சிறப்பாக அமையும். திருப்பணிகள் சிறப்பாக அமையும். மகளிர் வழியிலே தக்க சமயத்தில் உதவிகள் கிட்டும்.
மிதுனம் :
கலை, தொழில் ஆர்வம் சிறப்பாக அமைய காத்திருக்கிறது. சிறு, குறு தொழில் செய்வோர் கூடுதல் லாபம் பெறலாம். உற்பத்தி பொருட்களுக்கு சந்தையிலே நல்ல மதிப்பும், பணமும் கிடைக்கும். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். இழந்த பதவிகளை மீண்டும் பெற காத்திருக்கிறீர்கள். அரசியலில் ஆர்வமும், அனுகூலமும் கூடும். காதல் வாய்ப்புகள் சுமாராகதான் உள்ளது. யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம்.
கடகம் :
காரியம் வெற்றி கைகூடும். ஒரு சிலருக்கு காலையில் கவலை, மாலையில் மகிழ்ச்சி அமையலாம். காகித தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு யோகமான நாள். விவசாயிகளுக்கு பழைய கடன்களை அடைக்கும் சூழல் ஏற்படலாம். வாகன யோகம் அமைய காத்திருக்கிறது. இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். மனதிற்குள் நிம்மதி கிடைக்கும். ஆன்மீக நாட்டம் கிடைக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள். கூட்டுக்குடும்பங்களிலே குழப்பங்கள் குறையும். அரசியல் மற்றும் காதல் வாய்ப்புகள் அற்புதமாக அமையும். பெண்கள் வழியில் தக்க சமயத்தில் பெரிய உதவிகள் கிடைக்கும்.
கன்னி :
உழைப்பும், ஆர்வமும் கூடும். பயன் குறைவாகத்தான் இருக்கும். கவலைப்பட வேண்டாம். காலையில் கவலை, மாலையில் மகிழ்ச்சி என்று மாறி, மாறி அமையலாம். அதிக லாபம் பெறக்கூடிய நிலை இருந்தாலும், சில தடைகள் ஏற்படலாம். மனதில் குழப்பம் வேண்டாம். நட்பு வழியிலே கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் மிக கவனம் தேவை. பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். அதனால், பலன் கிடைக்கும்.
துலாம் :-
பொருள் ஆதாயம், தனவரவு கூடும். ஏ.டி.எம்., காசோலை வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அரசியல் வாய்ப்புகள் அமோகமாக அமையும். மேலிடத்திலும், தொண்டர்களிடமும் செல்வாக்கும், சொல் வாக்கும் கூடும். காதல் வாய்ப்புகள் சுமாராக இருக்கும். மகளிர் வழிகளில் கவனம் தேவை. உழைப்புக்கேற்ற பலன் காத்திருக்கிறது.
விருச்சிகம் :
நல்வாழ்வு செய்திகள் வரும். சிந்தனை, கவிதை வளம் கூடும். எழுத்து துறையினருக்கு நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் படைப்புகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். புதிய விருதுகள் கிட்டும். ஆன்மீக நாட்டம் கூடும். பாராட்டுகள் கிடைக்கும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பும், முன்னேற்றமும் கிடைக்கும். அரசியல் வாய்ப்புகள், காதல் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். மகளிர் நலன்கூடும்.
தனுசு:
பாசம், நேசம் கூடும். பாசத்துக்குரியவர்கள், அன்புக்குரியவர்களின் சந்திப்புகள் நிகழும். பிரிந்தவர்கள் பிரியத்துடன் ஒன்று சேரலாம். பழையவற்றை எண்ண வேண்டாம். புதிய காரியங்களில் சிறப்பாக செயல்படுங்கள். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் அமையும். கோவில்,விழாக்கள் சம்பந்தப்பட்ட வகையில் சில பொறுப்புகள் அமையலாம். கட்டுப்பாடுடன் செயல்படுங்கள். அவசரம், ஆவேசம் கூடாது. தொழில்வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
மகரம் :
ஆன்மீக சிந்தனையும், ஆன்மீக நாட்டமும் கூடும். திருவிழா வாய்ப்புகள் அமையும். கூட்டுக்குடும்பங்களிலே குழப்பங்கள் குறையும். மின்சாரம், நெருப்பு போன்ற தொழில் செய்வோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் கவனம் தேவை. பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம் :
செலவுகள் கூடத்தான் செய்யும். அலைச்சலும் கூடும். ஆதாயமும் கூடும். சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். புதிய கடன் வசதிகள் அமையலாம். தங்கம், வெள்ளி, இரும்பு, எஃகு வியாபாரிகள் ஏற்றம் காணலாம். ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பான லாபத்தை அளிக்கும்.
மீனம் :
மறதியையும், சோம்பலையும் மாற்றப்பாருங்கள். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். கோபத்தை கைவிடுங்கள். விறுவிறுப்பாக செயல்பட்டால் காரியம் வெற்றி கிடைக்கும். எந்த காரியத்திலும் பொறுப்புடன் செயல்படுங்கள். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். அரசியல் அனுகூலம் கூடும். சிறந்த முன்னேற்றம் காணலாம். செல்வாக்கும், சொல்வாககும் கூடும். பசு மற்றும் கன்றுகளால் கூடுதல் லாபம் காணலாம்.