இன்றைய ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் (23-04-2021)
இன்றைய நாளில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் என்பதை ஜோதிட நிபுணர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கணித்துள்ளார்.
23.04.2021
வெள்ளிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை
மேஷம்:
வேகம் கூடும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். காரியம் கைகூடும். உடல்நலம் சீராகும். மனக்குழப்பங்கள் குறையும். வாகனங்களில் விழிப்புடன் செல்ல வேண்டும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். யாருக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டாம். சிறு, குறு தொழில் செய்வோர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிட்டும். மண்பாண்டம், அலுமினிய தொழில் செய்வோர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். காதல் வாய்ப்புகள் சுமாராகத்தான் இருக்கும்.
ரிஷபம்:
காரியம் கைகூடும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். சிலருக்கு காலையில் கவலை, மாலையில் மகிழ்ச்சி கிடைக்கும். மனதில் குழப்பம் வேண்டாம். வெளியூர், வெளிநாட்டு தகவல்கள் சாத்தியமாகும். விருப்பங்கள் நிறைவேறும். அன்புக்குரியவர்கள் சந்திப்பு நிகழும். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாகவும், காதல் வாய்ப்புகள் சுமாராகவும் இருக்கும். மின்சாரம், நெருப்பில் கூடுதல் கவனம் தேவை. பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். பயணங்ளில் உடைமைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லவும்.
மிதுனம்:
கலை ஆர்வம், தொழில் ஆர்வம் சிறப்பாக அமையும். சிலருக்கு தோல் பிரச்சினை, வியர்வை பிரச்சினை, அரிப்பு பிரச்சினை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோசனை எடுக்கவும். மருத்துவ ஆலோசனை தேவை. பயணங்களுக்கு பலன் கிடைக்கும். உற்பத்தி பொருட்களுக்கு சந்தையிலே நல்ல மதிப்பு கிடைக்கும். பொருட்களின் தரத்தை இன்னும் கூட்ட வேண்டும். பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பயன்பெறுவார்கள்.
கடகம் :
புகழ், பாராட்டு, பெருமை கூடும். கலை, இலக்கிய, நாடக, இசைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் படைப்புகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது. வெளியூர் தகவல்கள் சாத்தியமாகும். உணவுத் தொழில் செய்வோருக்கு விழிப்புணர்வு தேவை. பெற்றோர் வழி மருத்துவ செலவுகள் குறையும்.
சிம்மம்:
போட்டி, பொறாமை இருக்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்ற முயற்சிக்க வேண்டும். தகவல்கள் தனவரவு கூட்டும். பயணங்கள் இனிதாக அமைய வாழ்த்துகிறோம். பயணங்களில் கவனம் தேவை. விருப்பங்கள் நிறைவேறும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். சஞ்சலங்கள் குறைந்து, வழக்குகள் சாதகமாகும்.
கன்னி:
மனதிலே ஒரு சலனமும், சோர்வும், பயமும் ஏற்படும். இருப்பினும் சமாளிக்கலாம். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். பொது காரியத்தில் ஈடுபடுவோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள், சமுதாய சிந்தனையாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும். விருந்து, விழாக்கள் அமைய காத்திருக்கிறது.
துலாம் :
மனதிலே பயமும், பதட்டமும் ஏற்படும். அனுசரித்து, விட்டுக்கொடுத்து செல்லவும். பல காரியங்களை சாதிக்க துடிப்பீர்கள். தடைகள் வந்து கொண்டிருக்கலாம். தடைகளை பற்றி கவலைப்பட வேண்டாம். சிலருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம். வரவுகள் வரனாக அமையும்.
விருச்சிகம் :
பாராட்டும், புகழும் கூடும். நீங்கள் செய்யும் காரியங்களால் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். கண்திருஷ்டி ஏற்படும் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனத்தில் விழப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எந்த காரியத்தையும் விருப்பத்திற்கு செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆசிர்வாதமும், ஆலோசனையும் இருந்தால் சிறப்பாக அமையும்.
தனுசு:
சாந்தமான சூழல் ஏற்படலாம். மனக்குழப்பங்கள் மாறும். தொழில், கலை ஆர்வம் கூடும். அமைப்புகளில் இருப்போர் நல்ல முன்னேற்றம் காணலாம். இருந்தாலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். தங்கம், வெள்ளி, இரும்பு வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மகரம்:
குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க உள்ளது. அடுத்தவர் சிக்கல்களில் தலையிட வேண்டாம். வேலைகளை சிறப்பாக செய்யுங்கள். நிச்சயமாக கவலைகள் மாறும். பயம் கொள்ளத் தேவையில்லை. களிப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் தொந்தரவு குறையும். அரசியல் வாய்ப்புகள் மிக மிக அருமையாக அமையும்.
கும்பம் :
அசதி, உடல்சோர்வு தோன்றலாம். கவலைப்பட வேண்டாம். மனச்சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். கூட்டுக்குடும்பங்களிலே குழப்பங்கள் குறைய காத்திருக்கிறது. வங்கி, பாஸ்வேர்ட், ஏ.எடி.எம். வகைகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பணம் வாங்கும்போதும், கொடுக்கும்போதும் கூடுதல் கவனம் வேண்டும்.
மீனம் :
செலவுகள் கூடினாலும், சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் கூட காத்திருக்கிறது. தகவல்கள் சிறப்பாக அமைய காத்திருக்கிறது. வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். இருப்பினும் தொலைதூர பயணத்தை தவிருங்கள். விருந்து, விழாக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சென்று வரவும். தகவல்கள் சிலருக்கு சிக்கல் ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செய்யவும். மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் வெற்றிகளை குவிப்பீர்கள்.