Kadagam New Year Rasi Palan: வெற்றி மீது வெற்றி! 2025 கடக ராசிக்கு குபேர யோகம்தான் - ஆண்டு பலன்
Kadagam New Year Rasi Palan: 2025ம் ஆண்டு கடக ராசியினருக்கான ராசிபலன்கள் எப்படி அமையப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
2025 New Year Rasi Palan Kadagam: அன்பார்ந்த ABP Nadu வாசகர்களே! கடக ராசிக்கு ஒரு நல்ல காலம் வந்துவிட்டது என்று பலரும் ஒவ்வொரு வருடமும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே நல்ல காலம் இந்த 2025. கடகம் என்று சொன்னாலே தாய் உள்ளம் கொண்டவர்கள் என்பது முதலில் நினைவுக்கு வரும். கடந்த காலங்களில் பல விதமான சோதனைகளை சந்தித்த உங்களுக்கு, பெரிய சாதனைகளுக்கு 2025 வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாருங்கள் சுருக்கமாக உங்களது ராசிக்கு என்ன நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி :
குருவைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு ஆறாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஆனவர். பல இக்கட்டான சூழ்நிலையில் இருந்து குரு உங்கள் காப்பாற்றி இருப்பார். பிப்ரவரி 7ம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழிலில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அல்லது நீங்களாகவே வேறு தொழிலை செய்யலாம் என்று முடிவெடுக்கலாம். ஏழாம் தேதிக்கு பிறகு குரு லாப ஸ்தானத்தில் பயணிக்க போகிறார். இந்த காலகட்டத்தில் கடன்கள் இருந்தால், உங்களுக்கு குறைந்து பண வருவாய் உண்டாகும். எதிரிகள் நேரடியாக உங்கள் இடத்தில் மோத முடியாமல், மறைமுகமாக தாக்க முயற்சிக்கலாம். ஆனால் அவையும் கூட பலனளிக்காமல் போய்விடும். கடன் தொல்லை கஷ்டங்களில் இருந்து விடுபடும் காலகட்டம்.
பயம் வேண்டுமா?
கடகத்திற்கு 12-ம் வீட்டில் குருபகவான் வரப்போகிறார். ஜாக்கிரதையாக இருங்கள் என்றெல்லாம் பயமுறுத்தி இருப்பார்கள். ஆறாம் அதிபதி 12ஆம் வீட்டுக்கு வரும்போது வித்தியாசமான ராஜயோகங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். சங்கடங்கள் விலகி சந்தோஷங்கள் பெறும். நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிட்டும்.
தன் கையே தனக்குதவி என்றவாறு உங்களின் எதிர்காலம் அமையும். பாக்யாதிபதி 12ஆம் வீட்டிற்கு செல்லும்போது தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காரணம் பத்தாம் வீட்டிற்கு 12 ஆம் அதிபதி உங்கள் வீட்டிற்கு 12 ஆம் வீட்டிற்கு செல்கிறார். புரியவில்லை என்றால் தெளிவாக சொல்கிறேன், தொழிலுக்கு யார் எதிரியோ? அவர் உங்களுக்கும் எதிரியாக மாறுகிறார். அப்படி என்றால் நன்மை செய்யப் போகிறார் குரு? குறிப்பாக தொழில். வேறு இடத்திற்கு வேலை செய்ய செல்ல வேண்டும். ஊரிலிருந்து வெளியூர் சென்று தொழில் தொடங்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இது ஒரு ஏற்றமான காலகட்டம்.
தான் ராசியில் செவ்வாய் நீச்சம் அடைவது முதலில் புரிந்து கொள்ளாதவர்கள் கூட பிற்பகுதியில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அரசு வேலைக்கான வாய்ப்புகள் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடந்திடும். நீண்ட நாள் காத்திருந்த பணம் தொடர்பான காரியங்கள் சுமூகமாக முடியும். இடமாற்றம் தொழில் மாற்றம் ஏற்படும் அதன் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியை பெறுவீர்கள்.
ராகு கேது பெயர்ச்சி 2025:
ராகு கேதுக்கள் மே மாதத்திற்கு முன்பு வரை உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சற்று நிதானமான பலன்களை கொடுத்தாலும் கேட்டதை விரும்பி கொடுக்கக்கூடிய அனைத்தையும் ராகு செய்வார். எனக்கு எல்லாம் இருக்கிறது, என்ன குறை என்ற எண்ணத்தை ஒன்பதாம் இட ராகு உருவாக்கித் தருவார். மூன்றாம் இடத்தில் இருக்கும் கேது சற்று தடைகளை கொடுத்தாலும் பின்பு வெற்றியை தருவார். மே மாதத்திற்கு பிறகு ராகு கேது பெயர்ச்சியில் அஸ்டமராகவும், இரண்டாம் இடத்தில் கேதுவையும் சந்திக்க போகிறீர்கள்.
அஷ்டமத்து ராகு உங்களுக்கு மறைமுகமான குபேர யோகங்களை வாரி வழங்குவார். பணம் யாரிடத்தில் இருக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரிய வரும். மற்றவரிடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக சிம்மத்தில் இருக்கும் கேது பெரிய மனிதர்களிடம் தொடர்பு ஏற்படுத்துவார். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேட்ட இடத்தில் வேலை அமையும். காரணம் எட்டாம் இடம் என்பது பத்தாம் இடத்திற்கு லாப ஸ்தானம். தொழிலுக்கு லாப ஸ்தானத்தில் ராகு அமரும்போது, ஊரே போற்றுகின்ற தொழில் ரீதியான காரியங்கள் உங்களுக்கு அமையும். மொத்தத்தில் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு ஏற்றார் போல் தான் உள்ளது.