மேலும் அறிய

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

விவசாயத்துடன் தேனீ வளர்ப்பை இணைத்து மேற்கொள்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதன் மூலம் விளைச்சலையும் மேம்படுத்த முடியும்.

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது. “தேசிய தேனீக்கள் தினம் – தேனீயை பாதுகாப்போம், பூமியை காப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் தலைவர் பொதுப்பணி திலகம் தலைமையிலும், இணை இயக்குநர் பயிற்சி இலக்கு பூபதியின் தொழில்நுட்ப ஆலோசனையின்படியும் பயிற்சி நடைபெற்றது. இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி தொடக்க உரையாற்றினார்.

தேனீக்கள் இயற்கையின் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்களாக விளங்குகின்றன. பல்வேறு பயிர்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால், வேளாண் உற்பத்தி மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் அவற்றின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தேனீக்களின் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழல் சமநிலையையும் வேளாண் உற்பத்தியையும் பாதிக்கக்கூடும் என்பதால், தேனீக்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனின் மருத்துவப் பயன்கள், தேனீக்களின் வாழ்க்கைச் சுழற்சி, பல்வேறு வகையான தேனீக்கள், தேனீக் கூட்டங்களை முறையாக நிர்வகிக்கும் வழிமுறைகள், தேனீக்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொழில்நுட்ப வல்லுநரும் உதவிப் பேராசிரியருமான பாரதிதாசன், தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப உரையாற்றினார். தேன் அறுவடைக்குப் பிறகு அதன் தரத்தை பாதுகாப்பது, தேனில் மதிப்பு கூட்டுதல், மதிப்புக்கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

மேலும், தேன் அறுவடை செய்யும் போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தேனீக் கூட்டுகளை கையாளும் முறை, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், தேன் சேகரிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை நடைமுறையில் விளக்கப்பட்டன.

பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி வழிகாட்டுதலுடன் இணை ஆராய்ச்சியாளர்கள் இமயா, அருணாதேவி மற்றும் ரமா பிரபா நளினி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

விவசாயத்துடன் தேனீ வளர்ப்பை இணைத்து மேற்கொள்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதன் மூலம் விளைச்சலையும் மேம்படுத்த முடியும். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு ஒரு துணைத் தொழிலாகவும் வருமானம் ஈட்டும் வாய்ப்பாகவும் அமையும் என பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது.

பயிற்சியின் நிறைவில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனீக்களை பாதுகாப்பதன் மூலம் வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒருங்கிணைந்து பாதுகாக்க முடியும் என்ற விழிப்புணர்வுடன் பயிற்சி நிறைவடைந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget