TN Farm Budget 2022: வேளாண்மை பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - பட்ஜெட்டில் அறிவிப்பு
வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்க 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் வேளாண் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என்றும், 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
TN Agriculture Budget 2022 LIVE: இலவச தென்னங்கன்று... வேளாண் செய்யும் இளைஞர்களுக்கு நிதி உதவி... வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் இதோ
மேலும், கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டமாக 3200 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்