பொங்கல் கரும்பு கொள்முதல் செய்தும் எந்த பலனுமில்லை - விவசாயிகள் வேதனை
பொங்கல் கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அரசு வழங்கும் 27 ரூபாய் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாததால் பொங்கல் கரும்பு உற்பத்தி பரப்பளவு குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை.
பொங்கல் சிறப்பு தொகுப்பில் குடும்ப அட்டைதாரருக்கு வழங்க விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்பு கொள்முதல் பணியை துவக்கியுள்ளனர் கூட்டுறவு துறையினர். ஒரு கரும்பிற்கு ஒரு ரூபாய் விலை ஏற்றி 27 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். உரவிலை, கூலி உயர்வு, பொங்கல் கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அரசு வழங்கும் 27 ரூபாய் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லாததால் பொங்கல் கரும்பு உற்பத்தி பரப்பளவு குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டை போல் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்படும் பொருட்களில் முழு கரும்பு வழங்க உத்தரவிட்டு அவற்றை விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பு 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பன்னீர் கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறையினர் துவக்கி உள்ளனர். இதில் வேளாண் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பொங்கல் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு 6 அடி உயரம் கொண்ட பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கரும்பின் விலை கடந்த ஆண்டு 26 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 1 ரூபாய் விலை அதிகரித்து 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
பொங்கல் கரும்பை அறுவடை செய்து தமிழக அரசின் கூட்டுறவுத் துறைக்கு வழங்கும் விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை 26 ரூபாய்க்கு கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு ஒரு ரூபாய் விலை ஏற்றம் செய்து கொள்முதல் செய்தாலும் உரவிலை, கூலி உயர்வு உள்ளிட்டவைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதும், தமிழக அரசு ஒரு ரூபாய் விலை ஏற்றம் செய்து கரும்பு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதோடு ஆண்டுதோறும் பொங்கள் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், பொங்கள் கரும்பு பயிரிடும் பரப்பளவு கடந்த 3 ஆண்டுகளில் 250 ஏக்கரில் இருந்து 100 ஏக்கருக்கும் கீழ் பரப்பளவு குறைந்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.