மேலும் அறிய

எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணி

தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக செலவுகளும் குறைந்து, நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவித்துள்ளனர்.

விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. முன்பு ஏர் கலப்பையில் உழவு செய்து வந்த விவசாயிகள் அதற்கு பிறகு டிராக்டர் இயந்திரத்தில் இரும்பு கலப்பையை இணைத்து வயலை உழுதனர். அதிலிருந்து நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர்.

அந்தளவிற்கு விவசாய தொழிலில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால்தான். அந்த வகையில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெருமளவு இயந்திர பயன்பாட்டை மட்டுமே அதிகம் செயல்படுத்தி வருகின்றனர். காரணம் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கின்றன. ஒரு கதவு அடைப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்பார்கள். அது போல் விவசாய தொழிலாளர்கள் கட்டிடப் பணி உட்பட பல்வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர் இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டது.

நடவு பணியில் இருந்து களைப்பறித்தல், உரம் தெளித்தல் உட்பட அனைத்திற்கும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் நவீன கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக மாறி உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிகாடு பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் மானாவாரி பகுதியான இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது தட்டுப்பாடான நிலையில் தான் இருந்து வருகிறது.

எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணி

அதனால் தான் கடலை, உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பணிகளுக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எரிபொருள் இன்றி எளிமையாக மனித சக்தியை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை பயன்படுத்தி விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி சாகுபடியை தொடக்கி விடலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கடலையை விதைக்க முடியும். கடலை மட்டுமின்றி, உளுந்து,பயறு போன்றவற்றையும் இந்த இயந்திரத்தை கொண்டு நடவு செய்யலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வேங்கராயன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர் கூறுகையில்,"வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பது என்பது பெரும் பாடாக உள்ளது. இந்நிலையில்தான் இந்த நவீன இயந்திரம் வந்துள்ளது பெரும் உதவிகரமாக உள்ளது. தற்போது தனியார் வாயிலாக இந்த இயந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது. முன்பு வீட்டுக்கு ஒரு கலப்பை இருக்கும். அதுபோல் இப்பகுதி விவசாயிகளின் சிரமத்தை போக்கும் இந்த இயந்திரத்தை அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார் மேலும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget