மேலும் அறிய

Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்

Skoda Kylaq Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஸ்கோடா கைலாக்கிற்கு போட்டியாக அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

Skoda Kylaq Rivals: ஸ்கோடா கைலாக்கிற்கு போட்டியாக 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில்  அறிமுகமாக உள்ள 3 எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவிக்கள்

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தொடர்ந்து சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்க்ள் வலுவான வரி சலுகைகளை பெற்றன. அதன் தொடர்ச்சியாக இவற்றின் விலையை கார் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமாக குறைத்தன. இதனால், இந்த பிரிவை சேர்ந்த கார்களுக்கான தேவை என்பது தீவிரமாக உயர்ந்துள்ளது. அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள டாடா, மஹிந்த்ரா மற்றும் ரெனால்ட் போன்ற ப்ராண்ட்கள், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் புதிய மாடல்களை சந்தைப்படுத்த தயாராகி வருகின்றன. அந்த வகையில் 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

அடுத்தடுத்து வரப்போகும் சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்கள்:

1. மஹிந்த்ரா விஷன் எஸ்

மஹிந்த்ரா நிறுவனமானது தனது விஷன் - S அடிப்படையிலான எஸ்யுவியை இந்திய சந்தையில் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. உள்ளூர் சந்தையில் 2027ம் ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டுவருவதோடு, ப்ராண்டின் XUV 3X0 மாடலுடன் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாம். இது பாக்ஸி, கூர்மையான டிசைன், மஸ்குலர் பேன்னட் உடன் காட்சியளிக்கிறது. அதன் தோற்றம் ஒரு வகையில் ஸ்கார்ப்பியோ குடும்பத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. ப்ராண்டின் புதிய NU-IQ ஆர்கிடெக்ட்சர் அடிப்படையில் உருவாகும் முதல் எஸ்யுவி ஆக இது திகழ உள்ளது.  இது பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சாரம் என பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை இடம்பெற உதவுமாம். 

அதன்படி,  இந்த மாடல் பல பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களை கொண்டு சந்தைப்படுத்தப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. XUV 3XO-வில் உள்ள 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்தப்படலாம். இது ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னையும் பெறக்கூடும். அதன் மோனோகோக் ப்ளாட்ஃபார்மைக் கருத்தில் கொண்டு, இந்த மாடல் AWD அமைப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. விஷன் எஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட இந்த எஸ்யூவியின் உட்புறம், செங்குத்தாக, உயரமாகப் பொருத்தப்பட்ட டாஷ்போர்டு, ஒரு பெரிய சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் எதிர்கால பாணியிலான 'பிஇ'-ஸ்டைல் ​​ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை கொண்டிருக்கும். இதோடு வெண்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள், லெவல்-2 ADAS, 6 ஏர்பேக்குகள், பனோரமிக் க்ளாஸ் ரூஃப், பவர்ட் முன் இருக்கைகள் போன்ற பல அம்சங்கள் இந்த மாடலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைப்படுத்தலின் போது இதன் விலை ரூ.9 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நீளும் என கூறப்படுகிறது.

2. புதிய தலைமுறை டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்தபடி புதிய தலைமுறை நெக்ஸான் 2027ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது . தற்போதைய எடிஷனே பல சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களை கொண்டு ஒரு முழுமையான எஸ்யுவி ஆக பயனாளர்களால் கொண்டாடப்படுகிறது. புதிய தலைமுறையில் நெக்ஸான் ஒரு தனித்துவமான வடிவமைப்பு, புதிய வண்ண ஆப்ஷன்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் வெளிவரக்கூடும். இருப்பினும், ஏற்கெனவே கணிசமான அம்சங்களை அது வழங்குவதால், புதிதாக என்னென்ன சேர்க்கப்படலாம் என்பதை துல்லியமாக கணக்கிட முடியவில்லை.

ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து டாடா மோட்டார்ஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே, புதிய தலைமுறை நெக்ஸானில் அது இடம்பெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. நெக்ஸான் ஏற்கனவே டர்போ சிஎன்ஜி இன்ஜினை கொண்டிருந்தாலும்,  விற்பனையை அதிகரிக்க விரும்பினால், ஆல்ட்ரோஸில் உள்ள 1.2-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை, சிஎன்ஜி மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் இணைத்து நெக்ஸானில் வழங்கலாம். சந்தைப்படுத்தலின் போது இதன் விலை ரூ.9.5 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நீளும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி

3. ரெனல்ட் ப்ரிட்ஜர்

ரெனால்ட் நிறுவனம் pரிட்ஜர் என்ற புதிய சப்-காம்பாக்ட் எஸ்யுவியை உருவாக்கி வருகிறது. இந்த பிர்வில் ப்ராண்ட் சார்பில் ஏற்கனவே உள்ள கைகர் உடன் புதிய மாடலை இணைக்க உள்ளது. வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மைலேஜை  விரும்பும் பயனர்களை ரெனால்ட் குறிவைக்கிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, ப்ரிட்ஜர், சிறந்த எரிபொருள் பயன்பாட்டை வழங்குவதில் கவனம் செலுத்தி, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படலாம். டஸ்டர் மாடலில் இந்த இன்ஜினை சோதித்தபோது லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் மைலேஜ் அளித்தது.  டஸ்டர் நான்கு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காராக இருக்கும் நிலையில், ப்ரிட்ஜர் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காராக உள்ளது. எனவே, இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடும்.  இந்தியாவில் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனஒஇ கொண்ட லைஃப்ஸ்டைல் ​​சப்-காம்பாக்ட் எஸ்யூவியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்

ரெனால்ட் ப்ரிட்ஜர், டஸ்டரின் சிறிய எடிஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது அதன் பெரிய மாடலில் இருந்து எடுக்கப்பட்ட பல அம்சங்களைக் கொண்டிருக்கும். ரெனால்ட் நிறுவனம் டூயல் ஸ்க்ரீன் செட்-அப் , பனோரமிக் சன்ரூஃப், பவர் ட்ரைவர் இருக்கை, காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா மற்றும் பல வழங்கப்படலாம். உள்ளூர் சந்தையில் ரெனால்ட் ப்ரிட்ஜர், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஸ்கோடா கைலாக், ஹுண்டாய் வென்யு, மாருதி ப்ரேஸ்ஸா மற்றும் பிற சப்-காம்பாக்ட் எஸ்யுவி கார்களுக்குப் போட்டியாக அமையும். இதன் தொடக்க விலை ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சம் வரை நீளக்கூடுமாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget